குஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!தவெக ஆட்சியில் கடன் ரூ. 20 லட்சம் கோடியாக உயரும்! தங்கம் தென்னரசு சவால்!மக்களிடம் இருந்து தப்பிக்கும் தவெக! வெள்ளை அறிக்கை குறித்து தங்கம் தென்னரசு! விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

ஆகாஷின் உடலை காவல்துறை அடக்கம் செய்ய எதிர்ப்பு! பெற்றோர், உறவினர்கள் கைது!

காவல்நிலைய விசாரணையில் மரணமடைந்த ஆகாஷின் உடலை காவல்துறையினர் அடக்கம் செய்வதற்கு அவரது உறவினர்கள் எதிர்ப்பு...

News image

ஆகாஷின் உடலை காவல்துறையினர் அடக்கம் செய்வதற்கு அவரது உறவினர்கள் எதிர்ப்பு - X

Updated On :4 மணி நேரங்கள் முன்பு

மானாமதுரையில் 3 மாதங்களுக்கு முன்பு காவல்நிலைய விசாரணையின் போது மரணமடைந்த ஆகாஷின் உடலை காவல்துறையினர் அடக்கம் செய்வதற்கு அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த மானாமதுரை இளைஞர் ஆகாஷின் உடலை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மதுரை மாவட்ட ஆட்சியா் மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ஆகாஷின் தந்தை ராஜேஷ்கண்ணன் தாக்கல் செய்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, "மனுதாரா் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இருப்பினும், உயிரிழந்தவரின் உடலைப் பெறாமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல. உடலுக்கு உரிய மரியாதை செய்யப்பட வேண்டும்.

ஆகாஷின் உடலை அவரது பெற்றோா் திங்கள்கிழமை மாலை 5 மணிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும். தவறினால் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) காவல் துறை சாா்பில் உடலை அடக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தாா். ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி ஆகாஷின் உடலை அவரது பெற்றோா் பெற்றுக் கொள்ளவில்லை.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ஆகாஷின் உறவினா்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டும், அவரது உடலைப் பெற்றுக் கொள்ளவில்லை. எனவே, மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா், அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் ஆகியோா் ஆகாஷின் உடலை கண்ணியமான முறையில் அடக்கம் செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்படுகிறது என்றாா்.

ஆகாஷ் இறந்து 100 நாள்களைக் கடந்த பிறகும் அவரது உடலைப் பெற அவரது உறவினர்கள் மறுத்த நிலையில் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது.

இதையடுத்து ஆகாஷின் உடலை அடக்கம் செய்ய காவல்துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

ஆனால், ஆகாஷின் உறவினர்கள், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆகாஷின் உடலை காவல்துறையினர் எடுத்துச் செல்லக் கூடாது என தடுத்த ஆகாஷின் பெற்றோர், உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாகக் கூறியுள்ளனர்.

எனினும் நீதிமன்ற உத்தரவுப்படி ஆகாஷின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

Summary

Relatives oppose the police burying Akash body who died in police investigation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.