மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

இன்றைய செய்திகள் ஜூன் 16 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.

News image

வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிதியமைச்சர் மரிய வில்சன் - DIPR Tamil Nadu

Updated On :16 ஜூன் 2026, 10:04 pm IST

டெலிகிராம் தலைமை செயல் அதிகாரி பாவெல் டுரோவ், இந்தியாவில் டெலிகிராம் செயலிக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையானது, 15 கோடி பயனர்களுக்கான தண்டனை எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்று உலகத் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்த பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் சிறிது நேரம் உரையாடினார்.

தமிழ்நாட்டின் நிதி நிலைமை மோசமடைய நலத்திட்டங்கள் காரணமா? என்ற கேள்விக்கு நிதித் துறை செயலாளர் சித்திக் ஐஏஎஸ் விளக்கம் அளித்தார்.

’’யாரையும் குறை சொல்ல இந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. தற்போதைய நிலைமையை தெரிவிக்கவே அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அரசுக்கு ரூ. 100 வருவாய் கிடைத்தால், ரூ. 145 செலவாகிறது. ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 45 ரூபாய் பற்றாக்குறையாக உள்ளது'' எனக் குறிப்பிட்டார்.

நாட்டிலேயே முதியோர் விகிதம் வேகமாக அதிகரித்துவரும் மாநிலமாக தமிழ்நாடு மாறிவருவதாக நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று (ஜூன் 16) தெரிவித்தார்.

நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17% ஆக உள்ளது.

தமிழ்நாட்டின் நிதிநிலைமை தொடர்பாக நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று (ஜூன் 16) வெள்ளை அறிக்கை வெளியிட்டார்.

தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது. ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டிற்கான வரி வருவாய் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று (ஜூன் 16) வெள்ளை அறிக்கை வெளியிட்டுத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் நிதிநிலைமை தொடர்பாக நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று (ஜூன் 16) வெள்ளை அறிக்கை வெளியிட்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட்டு அது குறித்து விரிவாக விளக்கம் அளித்தார்.

கனத்த இதயத்துடன் அதிமுகவிலிருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) தெரிவித்துள்ளார்.

தமிழக விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடியில், அனுபவம் இல்லாத காரணத்தால் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்தி வருகிறது முதல்வர் தலைமையிலான தவெக அரசு என்று அதிமுக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் ஜூலை மாதம் மின்கட்டணம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின் கட்டண உயர்வை முதல்வர் பரிசீலித்து அறிவிப்பார் என மின்சாரத் துறை அமைச்சர் ஆர். நிர்மல் குமார் இன்று (ஜூன் 16) தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த ரூ.15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைத்திட முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (ஜூன் 16) உத்தரவிட்டுள்ளார்.

மின் பழுதுகளைச் சரிசெய்திடத் தேவையான 15,058 மின் பணியாளர்களை முறைப்படி நியமிக்கவும், மின் தளவாடப் பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்து, மின் பணியாளர்களை ரோந்துப் பணியில் ஈடுபடுத்திடவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ரெட்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் இன்று (ஜூன் 16) அறிமுகமாகியுள்ளது. ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

டர்போ வரிசையில் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். புத்தம் புது வடிவமைப்புடன் பேட்டரி திறன் மற்றும் செயல்பாட்டுத் திறன் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. பிரீமியம் தளத்தில் இருந்தாலும் விலையைப் பொருத்தவரை மத்திய தரத்தில் உள்ளது.

தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று (ஜூன் 16) மாலை வெளியிடப்படும் என்ற அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த்தை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று காலை நேரில் சந்தித்தார்.

மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல், சளி மருந்துகளை விற்பனை செய்ய மருந்தகங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

நீட் மறுதேர்வு நடைபெறவுள்ள நிலையில், வினாத்தாள் கசிவதை தடுக்க டெலிகிராம் செயலிக்குத் தற்காலிக தடை விதித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ. 75,000-க்கும் மேல் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு குறைந்தபட்சமாக ரூ. 35,000 பணப்பயன் கிடைக்கும் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ. 75,000 வரை பயிர்க்கடன் பெற்ற
குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து முதல்வர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் மணிமுத்தாறு அருவியில், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று(ஜூன் 16) அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் யோகி பாபுவின் கெணத்த காணோம் திரைப்படம் ஓடிடி தளத்தில் இன்று(ஜூன் 16) வெளியாகியுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூன் 16) சவரனுக்கு ரூ. 80 குறைந்துள்ளது.

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாமை முதல்வர் சி. ஜோசப் விஜய், இன்று(ஜூன் 16) குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார்.

தமிழகத்தில் மின்தடை அதிகரித்துள்ள சூழலில், சென்னை தலைமைச் செயலகத்தில் மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

மக்களின் பாதுகாப்பு பிரச்னைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? என்று முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஈரானுக்கு அமெரிக்கா ரூ. 3,000 கோடி வழங்குவதாக பரவும் செய்தி பொய் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தெற்கு கலிபோர்னியாவின் மொஜாவே பாலைவனத்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில், பி-52 ரக குண்டுவீச்சு விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளாகித் தீப்பிடித்து எரிந்ததில், அதில் பயணம் செய்த 8 பேரும் பலியானதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.