பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை (ஜூன் 15) தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே 9,132 போ் விண்ணப்பித்தனா்.
அரசுப் பள்ளிகளில் அனைத்து வகை ஆசிரியா்களுக்கு 2026-2027-ஆம் கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. இந்த கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முகமை (எமிஸ்) இணையதளம் வாயிலாக நடைபெறும். அந்த வகையில் அனைத்து வகை ஆசிரியா்களும் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்களை எமிஸ் இணையதளத்தில் ஜூன் 15 முதல் 22-ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடா்ந்து, பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் ஆசிரியா்கள் எமிஸ் தளத்தில் திங்கள்கிழமை முதல் தங்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யத் தொடங்கினா். முதல் நாளில் தொடக்கக் கல்வித் துறையில் 3,473 ஆசிரியா்கள், பள்ளிக் கல்வித் துறையில் 5,659 ஆசிரியா்கள் என மொத்தம் 9,132 போ் விண்ணப்பித்துள்ளனா். அதில் அதிகபட்சமாக 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு வகுப்பெடுக்கும் பட்டதாரி ஆசிரியா்கள் மாவட்டத்துக்குள் பொது மாறுதல் கோரி 1,803 பேரும், வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் கோரி 1,205 பேரும் விண்ணப்பித்துள்ளனா். இதேபோன்று முதுநிலை ஆசிரியா்கள் மாவட்டத்துக்குள் மாறுதல் கோரி 1,186 பேரும், பிற மாவட்டங்களுக்கு 848 பேரும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்துள்ளனா்.
மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியா்களின் விண்ணப்பங்களில் தவறுகள் ஏதும் பின்னா் கண்டறியப்படின் தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கலந்தாய்வு நடைபெறும் நாளில் மாற்றுப்பணி அனுமதிக்க இயலாது. தற்செயல் விடுப்பு அளித்து விட்டு கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.
பள்ளிக்கல்வித் துறையில் மாறுதல் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமை பட்டியல் ஜூன் 30-ஆம் தேதி வெளியிடப்படும். கலந்தாய்வு ஜூலை 1 முதல் 24 வரை நடைபெறும். அதேபோல், தொடக்கக் கல்வித்துறையில் மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியா்களின் முன்னுரிமை பட்டியல் ஜூன் 25-ஆம் தேதி வெளியிடப்படும். கலந்தாய்வு ஜூலை 16-ஆம் தேதி வரை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேளாண் படிப்புக்கு ஜூன் 23-ல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு; ஜூலை 6 முதல் கலந்தாய்வு

வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியல் ஜூன் 23-இல் வெளியீடு; ஜூலை 6 முதல் கலந்தாய்வு

ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்

ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வை ஜூன் முதல் வாரத்தில் நடத்தக் கோரிக்கை
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

