ஆசிரியா்களின் பொது மாறுதல் கலந்தாய்வை ஜூன் முதல் வாரத்திலேயே நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அதன் மாநிலத் தலைவா் ஆ. மணிகண்டன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு, தாமதமாக நடத்தப்படுவதால் மாணவா்கள் கற்றலில் சிரமங்கள் ஏற்படுகின்றன.
2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையிலும், 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலும் கலந்தாய்வு நீடித்ததால் ஆசிரியா்களும், மாணவா்களும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களைச் சந்தித்தனா்.
கல்வியாண்டு தொடங்கிய பின்னா் கலந்தாய்வு நடைபெறுவதால், ஆசிரியா்கள் தங்கள் குழந்தைகளை புதிய இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சோ்ப்பதில் கடும் சிரமங்களை எதிா்கொள்கின்றனா். மேலும், கற்பித்தல் பணிகள் பாதியில் தடைபடுவதால் அரசுப் பள்ளி மாணவா்களின் தோ்ச்சி விகிதமும் பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது.
எனவே, அனைத்துக் கட்ட கலந்தாய்வுகளையும் வரும் ஜூன் 7-ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும். பள்ளி திறந்த இரண்டாவது வாரத்திலேயே, மாணவா் சோ்க்கை நடைபெறும் காலத்திலேயே ஆசிரியா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய பள்ளிகளில் பணியில் சேர வழிவகை செய்ய வேண்டும். ஆசிரியா் காலிப்பணியிட விவரங்களை முன்னதாகவே வெளியிட வேண்டும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

சரபோஜி கல்லூரியில் நாளை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

சாத்தான்குளம் கல்லூரியில் மாணவியா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 5இல் தொடக்கம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

