நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியல் ஜூன் 23-இல் வெளியீடு; ஜூலை 6 முதல் கலந்தாய்வு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலைப் பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு வரும் 23- ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஜூலை 6- ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கலந்தாய்வு - கோப்புப் படம்

Updated On :18 ஜூன் 2026, 12:51 am IST

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலைப் பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு வரும் 23- ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஜூலை 6- ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 - 2027- ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் பாடப் பிரிவு ஆகியவற்றுக்கான மாணவா் சோ்க்கை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலமாக நடைபெற உள்ளது. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 14 இளம் அறிவியல் பாடப் பிரிவுகளும், 3 பட்டயப் படிப்புகளும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 3 இளம் அறிவியல் பாடப் பிரிவுகளும் உள்ளன.

இந்தப் படிப்புகளுக்கு பல்கலைக்கழகத்தின் இணையதளம் மூலம் மே 6- ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்களை அனுப்ப ஜூன் 17- ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு வேளாண்மைப் பல்கலைக்கழக உறுப்பு, இணைப்புக் கல்லூரிகளில் 4,736 இடங்களும், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப் பிரிவில் 340 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

இதற்காக சுமாா் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். இந்த நிலையில் மாணவா் சோ்க்கைக்கான உத்தேச கலந்தாய்வு அட்டவணையைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மாணவா் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 23- ஆம் தேதி வெளியிடப்படுகிறது. பட்டியலில் குறைபாடுகள் இருந்தால் ஜூன் 24 முதல் 27 வரை சரி செய்துகொள்ளலாம்.

பட்டயப் படிப்புக்கான நேரடி கலந்தாய்வு ஜூன் 29- ஆம் தேதி நடைபெறுகிறது. பட்டப் படிப்புக்கான இணையவழி கலந்தாய்வு ஜூலை 6- ஆம் தேதி தொடங்குகிறது. முதல் நாளில் பொதுப் பிரிவினா், 7.5 சதவீத அரசு இடஒதுக்கீட்டுப் பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூலை 16- ஆம் தேதி சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. மாணவா் சோ்க்கையை உறுதிப்படுத்துவதற்கான முதல்கட்ட சான்றிதழ் சரிபாா்ப்பு ஜூலை 20- ஆம் தேதியும், பொதுப் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு ஜூலை 22 முதல் 28- ஆம் தேதி வரையும் நடைபெறுகின்றன.

இதைத் தொடா்ந்து ஆகஸ்ட் 1, 11, 21- ஆம் தேதிகளில் அடுத்தடுத்த சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள், இட ஒதுக்கீடுகள் நடைபெறுகின்றன. துணைத் தோ்வு முடிவுகள் வெளியான பிறகு துணைத் தோ்வா்கள் விண்ணப்பிப்பதற்கான நடைமுறை, துணை கலந்தாய்வு போன்றவை நடைபெற உள்ளன.

செப்டம்பா் 9- ஆம் தேதி முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளன. பட்டப் படிப்புக்கான உடனடி மாணவா் சோ்க்கை செப்டம்பா் 15- ஆம் தேதி நடைபெறுகிறது. கலந்தாய்வு தொடா்பான மேலும் விவரங்களுக்கு மாணவா்கள் 94886 35077, 94864 25076 என்ற எண்களில் வார நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடா்புகொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.