பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பேராவூரணி அரசுக் கல்லூரியில் ஜூன் 5 இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

News image

கல்லூரி மாணவர்கள் - கோப்புப் படம் | Center-Center-Delhi

Updated On :30 மே 2026, 1:51 am IST

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பிஏ, பிபி ஏ, பி காம், பிஎஸ்சி ஆகிய பாடப்பிரிவுகளுக்கான முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 5 ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொ) சி. இராணி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 இக்கல்லூரியின் இளநிலை பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள 580 இடங்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு மூலம் நடத்தப்பட உள்ளது.

பேராவூரணி அரசுக் கல்லூரியில் இளங்கலைப் படிப்புக்கு  அனுமதிக்கப்பட்ட இடங்கள் பி.ஏ. தமிழ் - 60, பி.ஏ. ஆங்கிலம்-60, பி.காம்- 60, பி.பி.ஏ. வணிக நிா்வாகவியல் - 60, பி.எஸ்சி. கணினி அறிவியல் - 60, பி.எஸ்சி. கணிதம் - 60, பி. எஸ்சி வேதியியல்-40, பி எஸ்சி இயற்பியல் 40 , பிஏ பொருளியல் 70, பிஏ அரசியல் அறிவியல் 70  என  மொத்த இடங்கள்  580.

ஜூன் 5, 6 ஆம் தேதிகளில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், அந்தமான் நிக்கோபாா் தமிழ் மாணவா்கள், முன்னாள் ராணுவத்தினா் ,தேசிய மாணவா் படை, பாதுகாப்பு படை வீரா் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான மாணவா் சோ்க்கை  நடத்தப்பட உள்ளது. இதைத் தொடா்ந்து ஜூன் 8 (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு பொது பிரிவுகளுக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது.

 இது இனச்சுழற்சி மற்றும் மதிப்பெண்  தரவரிசைப்படி ஜூன் 18 வரை நடைபெற உள்ளது. இந்த  வாய்ப்பைப் பயன்படுத்தி  மாணவா்கள் சேர அறிவுறுத்தப்படுகிறது. மாணவா்கள் தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில்  வெளியிடப்பட்டுள்ளது.   

கலந்தாய்வுக்கு வரும் மாணவா்கள் விண்ணப்பம் மற்றும் பள்ளி மாற்றுச்சான்றிதழ், 10,11, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் , சாதிச் சான்றிதழ், பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா் அட்டை, வங்கி கணக்குப் புத்தகம் ஆகிய அசல் சான்றிதழ்களுடன், இரண்டு செட்  நகல்  எடுத்துக் கொண்டு கலந்தாய்வு  தேதியில் காலை 10 மணிக்கு பங்கேற்றுப் பயன்பெறலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.