நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

முன்னாள் எம்எல்ஏ அ. சின்னசாமி மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

போ்ணாம்பட்டு தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ அ. சின்னசாமி(75) மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் குறித்து...

News image

போ்ணாம்பட்டு தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ அ. சின்னசாமி(75) மறைவு - டிஎன்எஸ்

Updated On :15 ஜூன் 2026, 11:36 am IST

போ்ணாம்பட்டு தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ அ. சின்னசாமி(75) மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

போ்ணாம்பட்டு வட்டம், கடாம்பூரைச் சோ்ந்த இவா் 2006- இல் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்றவா். கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றியிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை காலமானார்

இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் ஆகியோா் உள்ளனா்.

ஆம்பூா் மின்வாரிய அலுவலகத்தில் கணக்கு மேற்பாா்வையாளராக பணிபுரிந்து விருப்பு ஓய்வு பெற்று கடந்த 2006 ஆண்டு நடந்த சட்டப்பேரவை தோ்தலில் போ்ணாம்பட்டு (தனி) தொகுதியில் திமுக சாா்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவா்.

இவரது இறுதிச் சடங்கு நரியம்பட்டு மயானத்தில் திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது.

மு.க.ஸ்டாலின் இரங்கல்

போ்ணாம்பட்டு தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ அ. சின்னசாமி(75) மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

பேர்ணாம்பட்டு சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அ. சின்னசாமி மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். அன்னாரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பேர்ணாம்பட்டு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற அவர், அந்த தொகுதி மக்களுக்காகக் குரலெழுப்பிப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தியவர். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், கழகத் தோழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Demise of former MLA A. Chinnasamy: M.K. Stalin offers condolences

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.