மேற்கு வங்கம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாங்கர் பகுதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு காரணமாக இருந்த முன்னாள் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ சௌகத் மொல்லா கைது சனிக்கிழமை (ஜூன் 6) செய்யப்பட்டுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக கடந்த மார்ச் 29 ஆம் தேதி, பாங்கர் பகுதியில் குற்றவாளிகள் கச்சா வெடிகுண்டுகளைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது, இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்த ஒருவர் பலியானார். மேலும் சிலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதனைத் தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே, மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நான்காவது குற்றவாளியாக முன்னாள் திரிணமூல் எம்எல்ஏ சௌகத் மொல்லாவை என்ஐஏ கைது செய்துள்ளது.
விசாரணையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்த உத்தரவிட்டர் சௌகத் மொல்லாதான் என்பதும் அந்தப் பகுதியை சேதப்படுத்துவதற்காக இந்தத் திட்டம் தீட்டப்பட்டதாகவும் எதிர்பாராதவிதமாக, குற்றவாளிகள் அதற்கான ஆயத்தப் பணிகளில் இருந்தபோதே குண்டு வெடித்ததாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த வழக்கில் யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளார்களா அல்லது வேறு ஏதும் திட்டம் வகுக்கப்பட்டதா என்ற கோணத்தில் என்ஐஏ விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
Former Trinamool Congress MLA Soukat Molla was arrested on Saturday (June 6) in connection with a bomb blast incident in the Bhangar area of South 24 Parganas district, West Bengal.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குண்டுவெடிப்பு வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ கைது: 14 நாள் நீதிமன்றக் காவல்

மேற்கு வங்கத்தில் ‘மகாராஷ்டிர மாடல்’! மமதாவிடம் இருந்து பறிபோகும் திரிணமூல்?

திரிணமூல் காங். எம்.பி மீது தாக்குதல்! சரிந்து விழுந்ததால் பரபரப்பு! | West Bengal
15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு


