அவிநாசி: அவிநாசி அருகே தெக்கலூரில் கௌசிகா நதியில் கழிவுகளை கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் சனிக்கிழமை சிறைப்பிடித்தனர்.
அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் நொய்யல் ஆற்றின் துணை நதியான கௌசிகா நதி தெக்கலூர், கணியாம்பூண்டி, புதுப்பாளையம், உப்பிலிபாளையம் ஆகிய 4 ஊராட்சிகளை கடந்து செல்கிறது. அந்த பகுதியில் ஏராளமானோர் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
இதற்கிடைடே, தெக்கலூர் கௌசிகா நதியில் தொடர்ந்து கழிவுகளை கூட்டி வருவதாக சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தெக்கலூர் ஏரிபாளையத்தில் உள்ள கௌசிகா நதி பகுதியில் கொட்டுவற்காக கேரளத்தில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகளை லாரியில் ஏற்றிக் கொண்டு சனிக்கிழமை காலை வந்தனர்.
இதை அறிந்த அந்த பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் அந்த லாரியை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Summary
Regarding the public detaining a lorry that had come to dump waste into the Kousika River at Thekkalur, near Avinashi...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இயற்கை எரிவாயு உருளைகள் ஏற்றி வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து

அவிநாசி: கௌசிகா நதியில் கழிவு கொட்ட வந்த லாரி சிறைப்பிடிப்பு

சமையல் எரிவாயு உருளைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

எம்-சாண்ட் கடத்தி வந்த டிப்பா் லாரி பறிமுதல்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

