உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ‘ஆயுத்’ அமைப்பு சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 17 அமிர்த வித்யாலயா பள்ளிகளில் ஒரே நேரத்தில் தேனீக்கள் பாதுகாப்புக்கான மரக்கன்றுகள் நடும் மாணவா்கள் இயக்கம் நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்ட மாணவர்கள், பள்ளி வளாகங்களுக்குள் தேனீக்கள் மற்றும் பிற மகரந்த சேர்க்கை உயிரினங்களை ஈர்க்கும் வகையிலான வேம்பு, வாழை, புங்கம், புளி, முருங்கை, நெருஞ்சி, இலந்தை, மா, நாவல், இலுப்பை, பூவரசு, கடம்பு உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
இந்த தாவரங்கள் தேனீக்கள், உள்ளூர் மகரந்தச் சோ்க்கை உயிரினங்கள், பறவைகள் ஆகியவற்றை பாதுகாப்பதோடு மண் வளம் மற்றும் வறட்சியைத் தாங்கும் திறனை மேம்படுத்த உதவுகிறது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார், ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் மேகலா, நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் ரேஷ்மி என். நாயர், கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை தற்காலிக இயக்கமாக அல்லாமல், நீண்டகால சமூகப் பொறுப்பாக இளைஞர்கள் ஏற்றுக்கொள்வது மிகவும் சிறப்பு வாயந்ததாக இருப்பதாக ஆயுத் அமைப்பின் தமிழகம் – புதுச்சேரி பிராந்திய ஒருங்கிணைப்பாளர்கள் பிரம்மச்சாரிணி குணதீதாமிர்த சைதன்யா மற்றும் பிரம்மச்சாரிணி சுவாதி ஆகியோா் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சத்தியமங்கலம் நகராட்சியில் 32 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்

உலக சுற்றுச்சூழல் தின விழாவில் மரக்கன்று நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினம் கரூரில் மரக் கன்றுகள் நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினம்: கவிதைப் போட்டி
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
