திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த மாணவர்கள் மீது, கார் மோதியதில் 3 மாணவர்கள் வியாழக்கிழமை பலியாகினர்.
மன்னார்குடி, தஞ்சை பிரதான சாலையில் காரக்கோட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது.
இதில், படிக்கும் மாணவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த காலனி தெரு முருகேசன் மகன் யோகேஸ்வரன் (12), வீரா காலனி முகேஷ் மகன் ரஷித் (12), இந்திரா காலனி ரமேஷ் மகன் ராஜமுரளி (12) ஆகிய மூன்று பேரும், வியாழக்கிழமை மாலை பள்ளி நேரம் முடிந்ததும் வீட்டுக்கு செல்வதற்காக பள்ளி அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

சாலை மறியலில் ஈடுப்பட்ட பொதுமக்கள்.
அப்போது, அவ்வழியே மதுப்போதையில் கூத்தாநல்லூர் வட்டம் லட்சுமாங்குடி கலைஞர் காலனி குப்புசாமி மகன் உலகநாதன் (51) அதி வேகமாக ஓட்டி வந்த கார், 3 மாணவர்கள் மீது மோதியதில் காயமடைந்த ராஜமுரளி நிகழ்விடத்திலேயே பலியானார்.
மற்ற இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியாகினர்.
இது குறித்து, வடுவூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து கார் ஓட்டுநர் உலகநாதனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Summary
Three students were killed on Thursday after being struck by a car while walking home from school near Mannargudi in Tiruvarur district.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளியில் தீ விபத்து: சமையலா் மருத்துவமனையில் அனுமதி
அரசு பேருந்து மோதியதில் பெயிண்டா் உயிரிழப்பு
மன்னார்குடியில் 7 குடிசை வீடுகள் தீக்கிரை
அரசுப் பள்ளி அருகே செயல்படும் மதுக் கடையை மூடக் கோரி அமைச்சரிடம் மனு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

