பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.71 ஆக நிறைவு!சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றத்துடன் நிறைவு!!காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்புதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு! மாலை நிலவரம்! (ஆக.21)

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 21 - நேரலை!

இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...

CM Vijay

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் - Youtube

Published On :21 ஆகஸ்ட் 2026, 7:11 pm IST
7:11 pm, 21 ஆகஸ்ட் 2026

விநாயகர் சதுர்த்தி: ஆப்கன் - இந்தியா டி20 தொடருக்கான அட்டவணையில் மாற்றம்?

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான தேதிகளில் திடீர் மாற்றம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

7:11 pm, 21 ஆகஸ்ட் 2026

‘காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் விருந்து’... இந்து சமய அறநிலையத்துறைக்கான அறிவிப்புகள்!

காமராஜர் பிறந்தநாளில் கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ் இன்று (ஆக. 21) சட்டப்பேரவையில் தமிழ்நாட்டிலுள்ள கோயில்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிட்டார்.

6:58 pm, 21 ஆகஸ்ட் 2026

பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல்

முதல்வர்கள் பலரின் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

6:38 pm, 21 ஆகஸ்ட் 2026

விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

விழுப்புரம் : நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டுத் திருவிழாவையொட்டி, விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினத்துக்கு ஆகஸ்ட் 29, செப்டம்பர் 8 ஆகிய தேதிகளில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.

4:58 pm, 21 ஆகஸ்ட் 2026

கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை விவசாயிகளுக்கும் காட்டியிருக்க வேண்டும்: உதயநிதி

எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியைக் கொண்டு சேர்ப்பதில் அரசு காட்டியிருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

4:22 pm, 21 ஆகஸ்ட் 2026

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு! மாலை நிலவரம்! (ஆக.21)

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்ந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4:05 pm, 21 ஆகஸ்ட் 2026

எம்எல்ஏக்களுக்கு அரசுப் பணத்தில் ஏன் கார் வழங்க வேண்டும்? பெ. சண்முகம்

3:32 pm, 21 ஆகஸ்ட் 2026

நடிகை செளகார் ஜானகி காலமானார்!

சென்னையில் பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி (வயது 94) வெள்ளிக்கிழமை (ஆக. 21) காலமானார்.

3:28 pm, 21 ஆகஸ்ட் 2026

தொகுதி மறுவரையறையில் முதல்வர் விஜய் பல்டி அடிக்கவில்லை: தமிழிசை சௌந்தரராஜன்

தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பல்டி அடிக்கவில்லை என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

3:28 pm, 21 ஆகஸ்ட் 2026

வரலட்சுமி விரதம்! எளிய முறையில் அனுஷ்டித்து லட்சுமி கடாட்சம் பெறலாம்!

வரலட்சுமி விரதம் இன்று வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வரலட்சுமி விரதம் என்றால் நோன்பு நோற்று, வீட்டில் கலசம் வைத்து அலங்கரித்து முறையாக பூஜை செய்ய வேண்டும்.

11:58 am, 21 ஆகஸ்ட் 2026

கார் வேண்டாம்!

திமுகவின் 59 எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு வழங்கும் கார் வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

11:36 am, 21 ஆகஸ்ட் 2026

பேரவையில் சினிமா பஞ்ச் டயலாக் பேசுவது எல்லாம்..! உதயநிதி பேச்சுக்கு தவெகவினர் எதிர்ப்பு

பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "முதல்வர் அந்த 3 கோப்புகள் மீது ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். சினிமாவில் பஞ்ச் டயலாக் பேசுவது எல்லாம் சட்டப்பேரவையில் பேசினால் சரிவராது" என்று கூறினார்.

உடனே தவெக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே திமுக உறுப்பினர்களும் எழுந்து நின்று குரல் எழுப்பினார்கள்.

11:35 am, 21 ஆகஸ்ட் 2026

தவெகவுக்கு பெயர் வைத்தது நான்தான்! ஜோதிடர் ரத்தன் பண்டிட்

தமிழக வெற்றிக் கழகத்துக்கு பெயர் வைத்தது நான்தான் என்று அக்கட்சியின் நிர்வாகியும் முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட ஜோதிடருமான ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

11:35 am, 21 ஆகஸ்ட் 2026

மேக்கேதாட்டு அணைக்கு 2027-ல் அடிக்கல் நாட்ட திட்டம் - தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது! - அன்புமணி வலியுறுத்தல்

மேக்கேதாட்டு அணைக்கு அடிக்கல் நாட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டும் நிலையில், தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது என வலியுறுத்தியுள்ள பாமக தலைவர் அன்புமணி, முதல்வர் விஜய் அனைத்துக் கட்சித் தலைவர்கள் அடங்கிய குழுவுடன் தில்லி சென்று பிரதமர், நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரையாவது நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

11:35 am, 21 ஆகஸ்ட் 2026

சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு போராட்டம்

இன்றைய சட்டப்பேரவையில் எண்ணூர் முகத்துவாரத்தில் கடந்த வாரம் மீன்கள் இறந்த விவகாரம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.

11:35 am, 21 ஆகஸ்ட் 2026

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக. 21, வெள்ளிக்கிழமை) கிராமுக்கு ரூ. 110 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,710-க்கும், சவரனுக்கு ரூ. 880 உயர்ந்து ரூ. 1,17,680-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ. 265 -க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 5,000 உயர்ந்து ரூ. 2.65 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

11:35 am, 21 ஆகஸ்ட் 2026

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுகள்: 13,343 தேர்வர்களுடன் இன்று தொடங்கியது

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முதன்மைத் தேர்வுகள், 13,343 தேர்வர்களுடன் இன்று (ஆக. 21) தொடங்கியது.

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுகள் ஆக. 21, 22, 23, 29, 30 ஆகிய காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் தேதிகளில் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.