பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல்

சௌகார் ஜானகி மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருப்பது பற்றி....

DMK President M. K. Stalin expresses condolences over the demise of Sowcar Janaki

மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Published On :21 ஆகஸ்ட் 2026, 6:52 pm IST

முதல்வர்கள் பலரின் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், பழம்பெரும் நடிகை 'பத்மஸ்ரீ' திருமதி சௌகார் ஜானகி அம்மையார் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்றபோதிலும், தமிழில் அறிமுகமான வளையாபதி திரைப்படத்திலயே பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளைச் சிறப்பாக உச்சரித்து, முத்தமிழறிஞர் கலைஞரின் கவனத்தை ஈர்த்தவர் சௌகார் ஜானகி. தலைவர் கலைஞரின் வசனத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாயகனாக அறிமுகமான பராசக்தி திரைப்படம் வெளியான அதே சமயத்தில்தான் இத்திரைப்படமும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

380-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவரது நீண்ட திரைப்பயணத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல பெரும் நட்சத்திரங்களுடன் நடித்திருக்கிறார்.

பேரறிஞர் அண்ணா, என்.டி.ஆர். எனப் பல முதலமைச்சர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றிருக்கிறார்.

தலைவர் கலைஞர் மீது அளவுகடந்த மரியாதை கொண்டவராக இருந்து, எங்கள் குடும்பத்தினரோடும் நட்போடு பழகிய சிறந்த மனிதப் பண்பைக் கொண்டவராக சௌகார் ஜானகி திகழ்ந்தார்.

புதிய பறவை, நீர்க்குமிழி, பாமா விஜயம், மோட்டார் சுந்தரம் பிள்ளை, எதிர்நீச்சல், இரு கோடுகள், தில்லுமுல்லு என நீண்டுகொண்டே போகும் அவர் நடித்த வெற்றிப்படங்களின் மூலமாக தென்னிந்திய மக்களின் மனதில் அவர் என்றும் புகழோடு வாழ்வார்.

அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி (வயது 94) வெள்ளிக்கிழமை (ஆக. 21) காலமானார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இதய நோய் பாதிப்புக்காக நடிகை செளகார் ஜானகி வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனையில் இதயத் துறை நிபுணர்களின் கண்காணிப்பில் செளகார் ஜானகிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

DMK President M. K. Stalin stated that Sowcar Janaki earned the affection of many Chief Ministers, including Anna and N.T.R.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.