தொகுதி மறுவரையறையில் முதல்வர் விஜய் பல்டி அடிக்கவில்லை: தமிழிசை சௌந்தரராஜன்
தொகுதி மறுவரையறையில் முதல்வர் விஜய் பல்டி அடிக்கவில்லை என்று தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு

பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் - கோப்புப்படம்
தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பல்டி அடிக்கவில்லை என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
திமுக போல் எதற்கெடுத்தாலும் தவெக கடுமையாக இருந்தால் நல்லதல்ல, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதல்வர் விஜய் பல்டி அடிக்கவில்லை. கார் இருப்பவருக்கே கார் கொடுக்க கூடாது; மக்கள் பணத்தை சரியாக பயன்படுத்துங்கள் என்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த பின்னர் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு பணிகளில் அவசரம் வேண்டாம். அடுத்த மாதம் குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில், இன்னும் பல பணிகள் முடிவடையாமல் உள்ளது. இதை நாங்கள் சுட்டிக்காட்டுவது பக்தியால்தான், பகையால் அல்ல. மதுரை குப்பை மாநகரமாக உள்ளது. குப்பையில் கூட ஊழல் செய்கிறார்கள். அதை இந்த அரசு கவனம் செலுத்த வேண்டும்.
தென்மாநில முதலமைச்சர் மாநாடு ஆரோக்கியமான ஒன்று. மத்திய அரசுக்கு தென்மாநிலங்களை பற்றி கவலையில்லை என்று சொல்வார்கள். ஆனால், அமித் ஷா தென்மாநிலங்கள் மீது கவனம் செலுத்துகிறார். கோதாவரி - காவிரி இணைப்பு விவகாரத்தில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் விஜய் பல்டி அடித்துவிட்டார் என விமர்சிக்கிறார்கள். சரியான விகிதாசாரம் பின்பற்றப்பட வேண்டும் என்று அவர் சொன்னதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?
தொகுதி மறுவரையறையில் அரசியல் செய்யாதீர்கள். பெண்களுக்கான இட ஒதுக்கீடு மூலம்தான் அவர்களுக்கான வாய்ப்பை உறுதி செய்ய முடியும். எந்தவிதத்திலும் தமிழகத்தின் சதவிகிதம் குறையாது என அமித்ஷா சொல்லியுள்ளார்.
கொடுத்ததெல்லாம் கொடுத்தார் என தவெக பெண் எம்.எல்.ஏ பாடினார், இருப்பவருக்கே கொடுப்பது சரியா? கார் இருப்பவர்களுக்கே கார் கொடுப்பது என்ன மாதிரியான அணுகுமுறை? மக்கள் பணத்தை சரியாக பயன்படுத்துங்கள்.
முதலமைச்சர்கள் மாநாட்டில் காவிரி விவகாரம் குறித்து முதல்வர் பேசவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? அவர் பேசியிருக்கலாம், பல செய்திகள் வெளியே வராமல் கூட போயிருக்கலாம். காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை முதல்வர் விஜய்யும் மத்திய அரசும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
தவெக மென்மையாக நடந்துகொண்டார், பாஜகவும் மென்மையாக இருக்கும், அவர்கள் கடுமையாக இருந்தால் நாங்களும் கடுமையாக இருப்போம். திமுக போல் எதற்கெடுத்தாலும் சண்டைபோட கூடாது. கடந்த ஆட்சி மாதிரி எதற்கெடுத்தாலும் கடுமையாக இருந்தால் நல்லதில்லை. கொள்கை ரீதியாக மாறுபட்டாலும் மத்திய அரசுடன் இணக்கமாக இருப்போம் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் மாற்றமா என்ற கேள்விக்கு, "அதெல்லாம் எதுவும் கிடையாது. டெல்லிக்கு போனாலே இப்படி நினைப்பீர்களா?" என்று பதிலளித்தார்.
Summary
Chief Minister Vijay has not made a U-turn on constituency delimitation: Tamilisai Soundararajan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





