விஜய் - சங்கீதாவின் விவாகரத்து வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சசிகலா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்ற நீதிபதியாக இருந்த சுஜாதாவுக்குப் பதிலாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாக சசிகலா என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதி சசிகலா விசாரித்து வந்தார்.
இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு ஏற்கனவே நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது. இருதரப்பு வழக்குரைஞர்களும் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், இருவரும் பரஸ்பரம் பிரிந்து விடுவது என சுமுகமான முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் பணிகள் உள்ளிட்ட காரணங்களால் விஜய்யும் சங்கீதாவும் காணொளிக் காட்சி வழியாக நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என கூறப்பட்டது.
விஜய் - சங்கீதா இருவரின் விவாகரத்து வழக்கு விசாரணை வரும் ஜூன் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஏப்.20 ஆம் தேதி விசாரணை நடப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இருவரின் விவாகரத்து வழக்கு முடிவுகள் என்ன வரும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், விஜய் - சங்கீதா ஆகிய இருவரும் விவாகரத்து வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சசிகலா திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே செங்கல்பட்டு குடும்ப நல நீதிபதியாக இருந்த சுஜாதா, மீண்டும் அதே பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
வழக்கமாக நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஒருவர் மூன்று ஆண்டுகள் அந்த நீதிமன்றத்தில் பணியாற்றுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட சசிகலா, ஒரே மாதத்தில் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
The transfer of Judge Sasikala, who had been presiding over the divorce case between Vijay and Sangeetha, has created a sensation.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பூரில் நீதிபதிகள் பணியிட மாற்றம்

84 மாவட்ட முதன்மை நீதிபதிகள் இடமாற்றம்
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!

செந்தாரப்பட்டியில் பெண் தீக்குளித்து தற்கொலை
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

