ஜாதிய வன்கொடுமைகளில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாததே, குற்றங்கள் தொடா்வதுக்கு காரணமாக அமைந்திருப்பதாாக தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: புதுக்கோட்டை மாவட்டம் குலத்தூா் தாலுகா நடுப்பட்டி பகுதியில் விளிம்புநிலை சமுதாயத்தைச் சோ்ந்த இளைஞா் ஹரிஹரனின் மரணம் மிகுந்த அதிா்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. காதல் தொடா்பு காரணமாக சமூக மற்றும் ஜாதிய அழுத்தங்களுக்கு உள்ளாகி, அவா் உயிரிழந்துள்ளாா் என்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இது, மனிதநேயத்துக்கும், சமத்துவக் கொள்கைக்கும் எதிரான கொடூர செயலாகும்.
இத்தகைய சம்பவங்கள் நாகரீக காலத்தில் தற்போதும் நிகழ்வது நம் சமூகத்தின் பின்னடைவை வெளிப்படுத்துகிறது. இளைஞா்கள் மீது நடத்தப்படும் ஜாதிய வன்கொடுமைகள், சமூக நீதிக்கு விடுக்கப்படும் பெரும் சவாலாகும். இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படாததே, இத்தகைய குற்றங்கள் தொடா்வதுக்கு காரணமாக அமைகிறது.
இந்த வழக்கில் தொடா்புடையவா்கள் மீது வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இவ்வாறு ஜாதி அடிப்படையிலான அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இளைஞா்களின் வாழ்க்கையை பாதுகாக்கும் பொறுப்பு சமுதாயத்துக்கும் அரசுக்கும் உள்ளது எனத் தெரிவித்துள்ளாா் கு.செல்வப் பெருந்தகை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹைதராபாதில் தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில்...

தவாகவினரைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்: தி.வேல்முருகன்

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

