மே 2 ஆம் தேதி தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதற்கு நடிகர் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
வேலை நிறுத்தம் என்னும் அணுகுமுறைக்கு ஆதரவு இல்லை என்றும், நடிகர்கள் வருமான பகிர்வு முறையில் பணியாற்றுவது தொடர்பாக தங்கள் தரப்பில் இருந்து இதுவரை கடிதமோ மின்னஞ்சலோ வரவில்லை எனவும் நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று (ஏப். 26) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சிறிய முதலீட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மானியத் தொகையை புதிதாக பொறுப்பேற்கும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த தீர்மானங்கள் சினிமா துறையில் உள்ள அனைவரின் கவனத்துக்குக் கொண்டு சேர்க்கும் வகையில், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
நடிகர் சங்கம் தொடர்ந்து இதே போக்கை கடைபிடிக்குமானால் தொடர் வேலை நிறுத்தம் செய்யவும் முடிவு செய்துள்ளதாக தயாரிப்பாளர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு நடிகர் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
நடிகர்கள், கலைஞர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வேலைநிறுத்தத்தை நடிகர் சங்கம் எப்போதும் ஆதரிக்காது என்றும், எங்கள் தரப்பில் அளிக்கப்பட்ட எந்தவொரு புகாருக்கும் தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் இருந்து தீர்வு வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் முடிவுக்குப் பிறகு அடுத்தகட்ட செயல்பாடு குறித்து இரு அமைப்பின் பிரதிநிதிகள் ஆலோசிக்கலாம் எனத் தெரிவித்துள்ள நடிகர் சங்கம், தமிழ்த் திரைத் துறையின் வளமான வருங்காலத்துக்காக ஒத்துழைப்பை நல்க ஆயத்தமாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
Summary
Producers Council Strike on May 2: Actors Association Expresses Dissatisfaction
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழம்பெரும் பாலிவுட் நடிகர் சுதேஷ் குமார் மறைவு!
திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று வேலைநிறுத்தம்! படப்பிடிப்புகள் ரத்து

புதுவையில் பிரெஞ்சு மொழியை தவிா்க்கக்கூடாது: பெற்றோா் சங்கம்
தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவில்லை: நடிகர்கள் சங்கம் அறிவிப்பு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


