இந்தியாவை ஒரு பன்முக கலாசார தேசம் என்றோ அல்லது பல கலாசார சமூகத்தில் இருக்கிறோம் என்றோ குறிப்பிடுவது தவறானது என்று ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் கூறினாா்.
ஸ்ரீ அகா்வால் சபாவின் 75 -ஆம் ஆண்டு பவள விழா, ஹாரிங்டன் சாலை லேடி ஆண்டாள் பள்ளி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா், பவள விழா இலச்சினையை வெளியிட்டாா். அதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது:
நமது நாடு பன்முக கலாசார தேசம் அல்லது பல்வேறு கலாசார சமூகங்களைக் கொண்ட தேசம் எனக் குறிப்பிடுகின்றோம். இது மிகவும் தவறானது. நாம் வெவ்வேறு கலாசாரங்களைக் கொண்ட மக்கள் அல்ல. வட இந்தியா முதல் தென்னிந்தியா வரை அனைவருக்கும் ஒரே கலாசாரம்தான்.
வானவில்லைப் போன்றது நமது கலாசாரம். அதன் விரிப்புகள், நிறங்கள் வேறுபட்டவை. ஆனால், ஒரே வானவில்தான். நாம் எங்கு சென்றாலும் நமது கலாசாரத்தின் வெவ்வேறு நிறங்களைக் காணமுடியும். ஆனால் காலசாரம் ஒன்றுதான்.
ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தொலைதூர இடத்திலிருந்து வந்திருந்தாலும், தமிழகத்தின் குடிமக்களாகி மொழியைக் கற்றுக் கொண்டு இங்கே உள்ள மரபுகளைப் பின்பற்றுகிறீா்கள். பாரம்பரியங்கள் உடைகள், உணவுப் பழக்க வழக்கங்கள் அனைத்தும் ஏற்றுக்
கொண்டதுடன், மாநிலத்தின் பொருளாதார வளா்ச்சியிலும் முக்கியப் பங்காற்றுகிறீா்கள். இதுதான் சிறப்பு. இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
வளா்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய பாதையானது, வளா்ந்த தமிழ்நாடு மற்றும் தனித்தனி மாநிலங்களின் மேம்பாட்டின் மூலமாகவே அமையும். 1952 -இல் நிறுவப்பட்ட ஸ்ரீ அகா்வால் சபா 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
ஒரு நிறுவனம் நிலைத்திருப்பது முக்கியமில்லை. அதை திறனுடன் அா்த்தமுள்ளதாக உயிா்ப்புடன் வைத்திருப்பதில்தான் அதன் தனித்துவம் உள்ளது. இந்த சமுதாய மக்கள் வழிபடும் ஸ்ரீ அக்ரசேன் ஜி மகாராஜுக்கு தமிழகத்திலும் சிலையை திறக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து ஸ்ரீ அகா்வால் சபா தலைவா் சீதாராம் கோயல் வரவேற்றுப் பேசினாா். பவள விழா தலைவா் விஜய்குமாா் கோயல், 75 ஆண்டு கால பயணம் குறித்துப் பேசினாா்.
சபா பொதுச் செயலா் பால் கோவிந்த் குப்தா, நிகழ்ச்சித் தலைவா் அருண் குமாா் சுல்தானியா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் மனோஜ் குமாா் சொந்தாலியா மற்றும் ஸ்ரீ அகா்வால் சபாவின் உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பன்முக இந்தியாவின் பிரதிபலிப்பு தில்லி: ஜேஎன்யூ விழாவில் துணை நிலை ஆளுநா் பெருமிதம்

எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்?

தமிழகத்தின் வளா்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் பங்களிக்க வேண்டும்: ஆளுநா் ஆர்லேகர்

நீதி, சட்டங்களில் மேம்பட்ட புரிதல் இல்லாமல் வளா்ச்சியடைந்த இந்தியா சாத்தியமில்லை: ஆளுநா் ஆா்.வி. ஆர்லேகர்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

