ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சென்னை - திருப்பதி சப்தகிரி விரைவு ரயில் இயக்கத்தில் தற்காலிக மாற்றம்

சென்னை - திருப்பதி சப்தகிரி விரைவு ரயில் இயக்கத்தில் தற்காலிக மாற்றம்

News image

ரயில் - கோப்புப்படம்.

Updated On :25 ஏப்ரல் 2026, 1:38 am IST

சென்னை - திருப்பதி இடையே தினமும் இயக்கப்படும் சப்தகிரி விரைவு ரயில் இருப்புப் பாதை பராமரிப்புப் பணிகளுக்காக ஏப். 27-ஆம் தேதி முதல் மே 2-ஆம் தேதி வரை சென்னை- ரேணிகுண்டா வரை மட்டுமே இயக்கப்படும் என தென் மத்திய ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தென் மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

திருப்பதி மற்றும் ரேணிகுண்டா ரயில் நிலையங்களுக்கு இடையே இருப்புப் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் சென்னை- திருப்பதி இடையே தினமும் இயக்கப்படும் சப்தகிரி விரைவு ரயில் ஏப். 27-ஆம்தேதி முதல் மே 2-ஆம் தேதி வரை ரேணிகுண்டா- திருப்பதி இடையே ரத்து செய்யப்படுகிறது.

மேற்கண்ட நாள்களில் சப்தகிரி விரைவு ரயில் சென்னை- ரேணிகுண்டா வரை மட்டுமே இயக்கப்படும். காலை 6.30-க்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, திருப்பதி செல்லும் சப்தகிரி விரைவு ரயில் ரேணிகுண்டா சந்திப்பு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மறு மாா்க்கத்தில் இந்த ரயிலின் ரேணிகுண்டா சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து வழக்கமான நேரமான 10.40-க்கு புறப்பட்டு சென்னை நோக்கிச் செல்லும். இந்த ரயிலில் பயணித்து ரேணிகுண்டாவில் இறங்கும் திருப்பதி செல்ல வேண்டிய பயணிகள் ரேணிகுண்டா மற்றும் திருப்பதி செல்ல இந்த இரு நகரங்களிடையே இயக்கப்படும் பேருந்துகள் அல்லது பிறவாகன வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.