தேர்தலில் நூறு சதவிகித வாக்குப்பதிவினை உறுதி செய்யுமாறு தவெக தலைவர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து, தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் வணக்கம்! ஏப்ரல் 23. தமிழகத்தின் ஜனநாயகத் திருவிழா நாள்.
எல்லோரும் சீக்கிரமாகவே எழுந்து தயாராகி, காலை 7மணியில் இருந்து 12 மணிக்குள், நமக்குரிய வாக்குச்சாவடிக்குச் சென்று நமது வாக்கினைப் பதிவு செய்திட வேண்டும்.
குறிப்பாக, முதியவர்களும், பெண்களும் வெயிலுக்கு முன்பாகவே தங்கள் வாக்கினைப் பதிவு செய்துவிடுவது நல்லது. மேலும்,வாக்காளர்கள் அனைவரும் மதியத்திற்குள் தங்களது வாக்கினைப் பதிவு செய்துவிட்டால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துகொள்ளலாம்.
எனவே, ஒருவர் விடாமல், ஒரு வாக்குகூட விடுபடாமல் ‘நம் வாக்கு - நம் உரிமை’ என்பதை உறுதி செய்ய, 100% விழிப்புணர்வுடன் இருக்கவே இந்த வேண்டுகோள். 100% வாக்குப் பதிவினை உறுதி செய்வதை லட்சியமாகக் கொண்டு வாக்களிப்போம். ஜனநாயகம் காப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
Let's Protect Democracy: TVK Chief Vijay's X Post
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

CPI அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய்! | TVK

ஆளுநரைச் சந்தித்தபோது விஜய்யுடன் சென்ற இவர் யார்?

ஆட்சியமைக்க அழைப்பாரா? ஆளுநரை மீண்டும் சந்திக்கிறார் விஜய்!
வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! விஜய்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


