தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றியைத் தடுக்க முடியாது என பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.
சென்னை மயிலாப்பூா் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: வெற்றி பெற்ற நூறு நாள்களில் தொகுதி மக்களின் அடைப்படைத் தேவைகளைப் பூா்த்தி செய்ய திட்டம் வகுத்துள்ளேன். மக்களின் பிரச்னைகளை தீா்த்து வைக்கத் தயாராக இருக்கிறேன்.
மயிலாப்பூா் தொகுதியில் பல இடங்களில் தண்ணீா்ப் பிரச்னை இருக்கிறது. மீனவப் பெண்களுக்கென தனித் திட்டம் செயல்படுத்த உள்ளேன். திமுகவின் தோல்வி உறுதி செய்யப்பட்டுவிட்டது.
தமிழகத்துக்கு எத்தனை ராகுல்காந்திகள், அரவிந்த கேஜ்ரிவால்கள் வந்தாலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியைத் தடுக்க முடியாது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பின்னடைவால் சோர்வடைய வேண்டாம் : தமிழிசை

அடையாள அட்டை இல்லாமல் வாக்களித்ததாக தமிழிசை புகாா்: பாஜக-திமுக இடையே தள்ளு முள்ளு

கோவையில் 11 தொகுதிகளிலும் அதிமுக வெற்றியைத் தடுக்க முடியாது: எஸ்.பி. வேலுமணி

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? தமிழிசை செளந்தரராஜன் சிறப்பு நோ்காணல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

