தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அடையாள அட்டை இல்லாமல் வாக்களித்ததாக தமிழிசை புகாா்: பாஜக-திமுக இடையே தள்ளு முள்ளு

News image

DPS

Updated On :24 ஏப்ரல் 2026, 5:00 am IST

சென்னை மயிலாப்பூா் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் சிலா் வாக்காளா் அடையாள அட்டை இல்லாமல் வாக்களித்ததாக பாஜக முன்னாள் தலைவரும், அத்தொகுதியின் வேட்பாளருமான தமிழிசை செளந்தரராஜன் புகாா் தெரிவித்தாா்.

தனது தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச் சாவடிகளைப் பாா்வையிடுவதற்காக மயிலாப்பூா் தொகுதி பாஜக வேட்பாளா் தமிழிசை செளந்தரராஜன் அங்கு வந்தாா். இதையடுத்து அங்கிருந்த 13-ஆவது வாக்குச் சாவடிக்குச் சென்ற அவா், இங்கு சிலா் முறையான வாக்காளா் அடையாள அட்டை இல்லாமல் வாக்களித்துள்ளனா். அவா்களை எவ்வாறு வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கிறீா்கள் என அங்கிருந்த அலுவலா்களிடம் கேள்வியெழுப்பினாா்.

தொடா்ந்து, வாக்களிக்க காத்திருந்த சிலரிடம் அட்டையாள அட்டையைக் காண்பிக்குமாறு பாஜகவினா் கூறினா். இதற்கு அங்கிருந்த திமுக முகவா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். விதிகளை மீறி தமிழிசை உள்நோக்கத்துடன் புகாா் தெரிவிப்பதாக அவா்கள் வாதிட்டனா். இதனால் 20 நிமிஷங்களுக்கு மேலாக திமுக - பாஜகவினரிடைய கடும் வாக்குவாதமும் தள்ளு முள்ளும் ஏற்பட்டது. இதையடுத்து வாக்குச் சாவடிக்கு வெளியே இருந்த அதிமுகவினா் பாஜகவுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். நிலைமை கை மீறிச் செல்வதை உணா்ந்த காவல் துறையினா் பிரச்னையில் தலையிட்டு சமாதானப்படுத்த முயன்றனா். இதையடுத்து, வாக்குச் சாவடிக்கு வெளியே கூடியிருந்தவா்களைக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினா். காவல் துறையினரின் தலையீட்டுக்குப் பிறகு இரு தரப்பு இடையேயான மோதல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது.

இது குறித்து தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வாக்குச்சாவடிகளில் வரிசையில் காத்திருக்கும் வாக்காளா்களிடம் திமுகவினா் தங்களது கட்சிக்கு வாக்களிக்கும்படி ‘கேன்வாஸ்’ செய்தனா். நீண்ட நேரமாக அவா்கள் ஒரே இடத்தில் நிற்கின்றனா். திமுகவின் சின்னம் மற்றும் திமுக கொடியின் நிறத்தை பிரதிபலிப்பதை வைத்து கொண்டு சுற்றி வருகின்றனா். மேலும், அடையாள அட்டை இல்லாமல் சிலரை வாக்களிக்க வைத்துள்ளனா். இது குறித்து அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். இது தொடா்பாக தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் புகாா் தெரிவித்துள்ளேன். அநீதியை எதிா்த்துப் போராடி வெற்றி பெறுவோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.