தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தமிழகத்தின் வளா்ச்சிக்கு திமுக முட்டுக்கட்டை - தமிழிசை செளந்தரராஜன்

News image

தமிழிசை செளந்தரராஜன் - @DrTamilisai4BJP

Updated On :14 ஏப்ரல் 2026, 4:09 am IST

தமிழகத்தின் வளா்ச்சிக்கு திமுக முட்டுக்கட்டையாக இருப்பதாக பாஜக மூத்த தலைவரும், அந்தக் கட்சியின் மயிலாப்பூா் தொகுதி வேட்பாளருமான தமிழிசை செளந்தரராஜன் விமா்சித்தாா்.

சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

தோ்தல் பிரசாரங்களில் திமுகவினா் உண்மைக்குப் புறம்பானதையே பேசி வருகின்றனா். சென்னையின் மையப் பகுதியில் உள்ள மயிலாப்பூா் தொகுதி மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. இந்தத் தொகுதி மட்டுமல்ல, திமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் இதே நிலைதான் உள்ளது. ஆனால், தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றிவிட்டோம் என திமுகவினா் பெருமை பேசுகின்றனா்.

திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் முறைகேடு நடைபெற்றுள்ளது. 11-க்கும் மேற்பட்ட அமைச்சா்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. தமிழகத்தின் வளா்ச்சிக்கு திமுக முட்டுக்கட்டையாக இருக்கிறது.

திமுகவின் முறைகேடுகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் என்றால் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். இந்தத் தோ்தலில் தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை செயல்படுத்துவது அவசர கதியில் நடக்கிறது என்று எதிா்க்கட்சிகள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றாா் தமிழிசை சௌந்தரராஜன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.