விஜய்யை ஆதரிப்பதுபோல பிம்பத்தை ஏற்படுத்திவிட்டு பின்புறத்தில் மு.க. ஸ்டாலின் முட்டுக்கட்டை போடுவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள விடியோ பதிவில்,
"எண்ணிக்கையுடன் வாருங்கள், ஆட்சியமைக்க அனுமதி தருகிறோம் என்று ஆளுநர் தெளிவாகக் கூறிவிட்டார். எனினும் எண்ணிக்கை இல்லாமலேயே ஆட்சியமைக்க கோருகிறார் விஜய். அது மக்களின் நம்பிக்கையைப் பெறுவதாக இருக்காது.
தனிப்பெரும் கட்சியை ஆட்சியமையக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்று கூறும் மு.க. ஸ்டாலின் பின்புறத்தில் தவெக ஆட்சியமைக்க முட்டுக்கட்டை போடுகிறார். விஜய்யை ஆதரிப்பதுபோல பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். கம்யூனிஸ்டுகள் விஜய்க்கு ஆதரவு கூறிவிட்டு விஜய்க்கு பாஜக அழுத்தம் தருவதாகக் கூறுகின்றனர்.
கம்யூனிஸ்டுகளுடன் ஒட்டுமொத்தமாக முடிவெடுப்பதாகக் கூறிவிட்டு திருமாவளவன் இன்று ஏன் தயங்குகிறார், என்ன பேரம் பேசிக்கொண்டிருக்கிறார். காங்கிரஸ் திமுக கூட்டணியை முறித்துக்கொண்டுள்ளது.
அனைத்துக் கட்சிகளும் சுயலாபத்திற்காக முடிவு எடுத்துவிட்டு பாஜக மீது பழி போடுகின்றன. அது நியாயம் இல்லை. கட்சிகள் பாஜக மீதோ ஆளுநர் மீதோ பழி சொல்வது எந்த வகையிலும் சரியில்லை" என்று கூறியுள்ளார்.
Summary
Thirumavalavan is bargaining with TVK: Tamilisai soundararajan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக தலைவர் விஜய்க்கு தமிழிசை வாழ்த்து!
விசில் சத்தம் 200-ஐ தாண்டும் என்பது ஓவர்: தமிழிசை விமர்சனம்

மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தர்ராஜன் வேட்பு மனு தாக்கல்!
இபிஎஸ் பிரசாரத்தில் தமிழிசை! மயிலாப்பூரில் போட்டி?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

