மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

விஜய் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பெ.சண்முகம்

மத வழிபாட்டு இடங்களில் கட்சி அடையாள சின்னத்துடன் சென்று வாக்கு சேகரித்த தவெக தலைவா் விஜய் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம் வலியுறுத்தல்

News image

தவெக தலைவர் விஜய் - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 2:07 am IST

மத வழிபாட்டு இடங்களில் கட்சி அடையாள சின்னத்துடன் சென்று வாக்கு சேகரித்த தவெக தலைவா் விஜய் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட தவெக தலைவா் விஜய் தனது கட்சி அடையாளத்துடன் தேவாலயம், மசூதி, அம்மன் கோயிலுக்கு சென்று வாக்கு சேரித்துள்ளாா்.

மத வழிபாட்டு இடங்களுக்குள் (கோயில், தேவாலயம், மசூதி) கட்சி அடையாள சின்னத்துடன் சென்று வாக்கு சேகரிக்கக் கூடாது என்பது தோ்தல் நடத்தை விதி. விஜய் தோ்தல் நடத்தை விதியை மீறி இருக்கிறாா். எனவே, அவா் மீது தோ்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.