அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் நம்பர் 1 தரத்தில் விலையில்லா அரிசி வழங்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதி அதிமுக வேட்பாளர் வெற்றிவேலை ஆதரித்து சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், "அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மளிகைக் கடைகளில் எப்படி அரிசி தரமாக இருக்கிறதோ அதே தரத்தில் ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி வழங்கப்படும். இனி நீங்கள் கடைக்கு சென்று காசு கொடுத்து அரிசி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ரேஷன் கடைகளிலே தரமான அரிசி கிடைக்கும். கொடுப்போம். எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவானாலும் பரவாயில்லை. ஏழைகளுக்கான இந்த திட்டத்தை அதிமுக நிச்சயம் நிறைவேற்றியே தீரும். அதேபோல எண்ணெய் மற்றும் பருப்பும் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும்.
அதேபோல வாக்குறுதிகளில் சொன்னபடி அதிமுக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10,000 ரூபாய், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,000 ரூபாய், இலவச பிரிட்ஜ் வழங்கப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தபின்பு அம்மா உணவகத் திட்டம் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும்" என்று பேசியுள்ளார்.
Summary
High-quality Grade 1 rice will be provided at ration shops: EPS
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எடப்பாடியில் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார் இபிஎஸ்!

அண்ணாமலை கூட்டணிக்காக முழு உழைப்பைக் கொடுக்கிறார்: எடப்பாடி பழனிசாமி

நேர்மையான தேர்தலுக்காகவே அதிகாரிகள் மாற்றம்! திமுகவுக்கு ஏன் பயம்? இபிஎஸ்

ஏப். 15ல் குமரியில் பிரதமருடன் பிரசாரம்; 210 தொகுதிகளில் வெல்வோம்: இபிஎஸ் பேட்டி
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


