மக்களவையில் தான் கூறிய '16' எண் குறித்த புதிருக்கான விடையை அவ்வளவு எளிதாக சொல்லிவிட மாட்டேன் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மசோதாக்கள் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
அப்போது, "மக்களவையில் இந்த 3 மசோதாக்கள் மீது நேற்று பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்தபோது, நான் இங்கே அமர்ந்து அதனை கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் உற்சாகம் குறைந்து உடைந்த நிலையில் இருந்தார். அவரால் ஒன்றிணைந்து செயல்பட முடியவில்லை. இந்த மசோதாவை நிறைவேற்ற முயன்றது தவறு என்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. அதனால் அவரால் இதில் ஈடுபட முடியவில்லை. அப்போதுதான் என்னுடைய போனில் தேதியைக் கவனித்தேன். ஏப்ரல் 16. அப்போதுதான் தெளிவாக புரிந்தது. இந்த 16 என்ற எண்தான் புதிருக்கான விடை. இந்த 16 என்ற எண்ணில்தான் எல்லாம் இருக்கிறது" என்று கூறினார்.
மேலும் உங்களுக்கு இதற்கான விடை தெரிந்தால் எனக்கு தகவல் அனுப்பலாம் என்று கூறி, உங்கள்(பாஜக) பிரச்னைகான பதிலும் இந்த 16 என்ற எண்ணில்தான் உள்ளது, அதனை நீங்கள் விரைவில் கண்டடைவீர்கள் என்று ஆளுங்கட்சி உறுப்பினர்களை நோக்கி கைகாட்டி ராகுல் பேசினார்.
இதையடுத்து 16 என்ற எண் எதைக் குறிக்கிறது என பலரும் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் இதுபற்றிய செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த ராகுல் காந்தி,
"இது ஒரு புதிர். இதற்கான விடையை நான் அவ்வளவு எளிதாக சொல்லிவிட மாட்டேன். ஒருவேளை நான் இதற்கான தீர்வைக் கண்டுபிடித்தால், 'இதுதான் அது' என்று உங்களிடம் கூறுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ராகுலின் பேச்சைப் பகிர்ந்து, "சிக்ஸ்டீன் என்ற சொல்லின் ஒலி 'எப்ஸ்டீனைப் போல் இருக்கிறது அல்லவா!' என்று பதிவிட்டுள்ளது.
ராகுலும் '16' என்ற எண்ணை ஒரு பிரச்னையாகக் குறிப்பிட்டு அதற்கு தீர்வு கண்டுபிடித்தால் சொல்கிறேன் என்று கூறுகிறார்.
ராகுல் கூறிய '16' தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகியுள்ளது.
Summary
It's a puzzle, will not reveal easily: Rahul Gandhi on number 16 in his Lok Sabha speech
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்!
டிரம்ப்புக்கு மோடி; அதுபோல தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு கூட்டாளி முதல்வர் தேவை! ராகுல் பேச்சு
தமிழகம் வந்தார் ராகுல் காந்தி!
மோடி ஒரு மாயாஜாலக்காரர்! ஆபரேஷன் சிந்தூர் போன்ற வித்தைகளை செய்தவர்! ராகுல் பேச்சு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


