தான் போட்டியிடும் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளுக்கு மாதம் ஒருமுறை கண்டிப்பாக வருவேன் என தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (ஏப். 16) கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெகவின் முழு தேர்தல் அறிக்கையை விஜய் வெளியிட்டு 10 முக்கிய அம்சங்களை வாசித்தார்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,500, குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 விலையில்லா சிலிண்டர்கள், மணப்பெண்களுக்கு 1 சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை, பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், மாணவர்கள் மற்றும் மகளிர் குழுக்களுக்கு ரூ. 5 லட்சம் வட்டியில்லா கடன், குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு, 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வரை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதன்பின்னர் தான் போட்டியிடும் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகள் பற்றி பேசுகையில்,
"தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளும் நம் தொகுதிகள்தான். அனைத்து தொகுதிகளுக்கும் எம்எல்ஏக்கள் இருப்பார்கள். ஆனால், என்னுடைய தொகுதிக்கு நான்தான் பிரதிநிதி. தமிழ்நாட்டில் நாம் நிச்சயம் ஆட்சிக்கு வருவோம். அந்தவகையில் தமிழ்நாட்டுக்கு நான் என்னவாக இருந்தாலும் என்னுடைய தொகுதிக்கு நான் எம்எல்ஏதானே.
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகள் எனக்கு எப்போதுமே கொஞ்சம் கூடுதல் ஸ்பெஷலாக இருக்கும். அதனால் என்னுடைய தொகுதிகளுக்கு நான் மாதம் ஒருமுறை கண்டிப்பாக வருவேன். அத்துடன் நீங்களும் என்னைச் சந்திக்கலாம். மிகவும் கடினம் என்று நினைத்துவிடாதீர்கள். ஈஸியாக என்னைச் சந்திக்கலாம். உங்களுடைய தேவைகளை நான் கேட்காமலே செய்துகொடுப்பேன்" என்று தெரிவித்தார்.
மேலும், தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கும் நிலையில் பெண்கள், தாய்மார்கள் தங்கள் வீட்டு வாசலில் விசில் சின்னத்தைக் கோலமாக போடுங்கள், அது நீங்கள் இந்த விஜய்க்கு தரும் ஆதரவாக இருக்கும் என்றும் கூறினார்.
Summary
I will visit the Perambur and Trichy East constituencies once a month: TVK Leader Vijay
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு தேர்தல்! தவெக வெற்றிபெற்றது எப்படி?
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் அமோக வெற்றி!
தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் முன்னிலை; திருச்சி கிழக்கில் பின்னடைவு

இன்று விஜய்யின் பெரம்பூர் பிரசாரம் ரத்து!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

