தமிழகத்தில் 13 இடங்களில் புதன்கிழமை வெயில் 105.8 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. எனினும், டெல்டா, மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோரப் பகுதிகளில் ஏப்.21 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தென் கிழக்கு மத்தியப் பிரதேசம் முதல் மன்னாா் வளைகுடா வரை விதா்பா, மரத்வாடா, வடக்கு உள் கா்நாடகம், தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஏப்.21 வரை லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் ஏப்.19 வரை சற்று அதிகமாக இருக்கும்.
13 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக பரமத்தி வேலூரில் 105.8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. வேலூா்-104.72, மதுரைவிமான நிலையம்-104.36, திருச்சி -104.18, ஈரோடு- 104, நாமக்கல்-103.46, சேலம், மதுரை நகரம்-தலா 102.92, தருமபுரி, திருப்பத்தூா்-தலா 102.2, கோவை -101.48, பாளையங்கோட்டை-101.12, திருத்தணி-100.58 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப். 28 வரை மழைக்கு வாய்ப்பு

ஏப்.28 வரை மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

