மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மாற்றத்திற்கானது தேசிய ஜனநாயகக் கூட்டணி : பிரதமர் மோடி

தேசிய ஜனநாயகக் கூட்டணியை மக்கள் மாற்றத்துக்கானதாக பார்ப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளது குறித்து...

News image

பூத் கமிட்டி உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின்போது... - X / BJP

Updated On :13 ஏப்ரல் 2026, 4:38 pm IST

தேசிய ஜனநாயகக் கூட்டணியை மக்கள் மாற்றத்துக்கானதாக பார்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 13) தெரிவித்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 13) கலந்துரையாடினார்.

தேர்தலுக்கு தயாராவது, பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் பணி குறித்து நிர்வாகிகளுடன் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.

பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்கள் பலர், நமோ செயலியில் முன்பதிவு செய்து மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூரை சேர்ந்த அஜித்குமார், திருவண்ணாமலை தெற்கு தொகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் மோடி கலந்துரையாடினார்.

அப்போது தமிழகத்துக்கு 11 மருத்துவ கல்லூரிகளை தந்தது பாஜக எனக் குறிப்பிட்டார். தமிழ்நாட்டிற்கு பாஜக செய்ததை மற்றவர்கள் மறைத்தாலும் மாற்றத்திற்கான கூட்டணியாக தேசிய ஜனநாயகக் கூட்டணி இருப்பதாகக் கூறினார்.

கோவை கவுண்டம்பாளையத்திற்குட்பட்ட ரம்யாவுடன் கலந்துரையாடிய மோடி, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கவலை அளிக்கும் வகையில் உள்ளதாகவும், போதைப்பொருள் கலாசாரம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், தேர்தல் பணிக்குத் தயாராவது, பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் முக்கியத்துவம் குறித்து மோடி கலந்துரையாடினார்.

Summary

TN Election 2026 PM Narendra modi meeting with BJP karyakarthas

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.