வருமான வரி தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் நடிகர் விஜய் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த மனு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது. கடந்த 2015-2016-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை நடிகா் விஜய் தாக்கல் செய்தபோது, திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அந்த ஆண்டுக்கான வருமானமாக ரூ.35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 பெற்ாக அவா் குறிப்பிட்டிருந்தாா்.
அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறையினா், நடிகா் விஜய் வீட்டில் 2015-ஆம் ஆண்டு சோதனை நடத்தினா். அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, ‘புலி’ படத்துக்காக அவா் பெற்ற ரூ.15 கோடி வருமானத்தைக் கணக்கில் காட்டாமல் மறைத்துள்ளாா் என கண்டறியப்பட்டதாக வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விஜய் தனது வருமானத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு மறைத்ததற்காக அவருக்கு ரூ.1.50 கோடி அபராதத்தை விதித்து 30.6.2022-இல் வருமான வரித் துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிா்த்து நடிகா் விஜய் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தாா். இந்த வழக்கில் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அண்மையில் தீர்ப்பளித்தார்.
நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்து, உரிய கால அவகாசத்துக்குள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருமான வரித் துறை அபராதம் விதித்த உத்தரவில் எந்த சட்ட விரோதமும் இல்லை. எனவே, இதில் நீதிமன்றம் தலையிட எந்தக் காரணமும் இல்லை எனக் கூறி, விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.
அப்போது, மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்டு, அபராத உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அனுமதியளித்த நீதிபதி, அபராதம் விதித்த உத்தரவு தாமதமாகப் பிறப்பிக்கப்பட்டது என்ற காரணத்தின் அடிப்படையில் மேல்முறையீடு செய்யக் கூடாது.
மற்ற காரணங்களைக் கூறி மேல்முறையீடு செய்யலாம் என உத்தரவிட்டார்.
Summary
Actor Vijay has filed an appeal before a division bench of the Madras High Court, challenging a single judge's order regarding income tax matters.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிக வருமான வரி செலுத்துவதில் தோனி முதலிடம்!

உயர்நீதிமன்றத்துக்கு நாளை முதல் விடுமுறை! அவசர வழக்கிற்கு என்ன செய்யலாம்?

‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை ஜூன் 15-க்குள் வெளியிட அனுமதி வழங்கி உத்தரவு
வருமான வரித் துறை சோதனை உண்மைதான்! இன்று ஆதாரங்களை வெளியிடுகிறார் செல்வப்பெருந்தகை!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


