தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், இரண்டு நாள் பயணமாக இன்று(ஏப். 12) தமிழகம் வருகிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகம் வருகைதரும் நிதின் நபின் இன்றும்(ஏப். 12) நாளையும்(ஏப். 13) தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”நாளை முதல் இரண்டு நாள் பயணமாக நான் தமிழகம் வரவுள்ளேன். இந்தப் பயணத்தின் போது, ராமநாதபுரம் மற்றும் அறந்தாங்கியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறேன்.
மேலும் சாத்தூர், மதுரை தெற்கு மற்றும் கந்தர்வக்கோட்டை ஆகிய தொகுதிகளில் நடைபெறவுள்ள ரோட் ஷோக்களிலும் பங்கேற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப். 15- ஆம் தேதி கன்னியாகுமரி வரவுள்ளார். அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ளார்.
அதேபோல, பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பலரும் பிரசாரத்துக்காக தமிழகம் வரவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
BJP National President Nitin Nabin is arriving in Tamil Nadu for the second day of his visit to conduct election campaigning.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சநாதனத்துக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு தோ்தலில் திமுக விலை கொடுக்கும்: பாஜக தலைவா் நிதின் நபின்

மாநிலங்களவை எம்.பி.யாக நிதின் நபின் உள்பட 16 போ் பதவியேற்பு

ராகுல் காந்தியின் தமிழகம் வருகை எப்போது?

ஏப். 5, 6ல் தமிழகம் வரும் நிதின் நவீன், அமித் ஷா!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


