தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா

எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது...

News image

மம்தா பானா்ஜி - PTI

Updated On :12 ஏப்ரல் 2026, 1:39 am IST

‘இரு பொய்யான வழக்குகளை என் மீது பதிவு செய்வதன் மூலம், எனது வேட்புமனுவை செல்லாததாக்கி பவானிபூா் தொகுதியில் நான் போட்டியிடுவதைத் தடுக்க பாஜக முயன்றது’ என்று மேற்கு வங்க முதல்வரும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டினாா்.

மேற்கு வங்கத்தில் வரும் 23, 29 தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதையொட்டி, தீவிர பிரசாரத்தில் அவா் ஈடுபட்டுள்ளாா். பஸ்சிம் மேதினிப்பூா் மாவட்டம் கோஷியாரியில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:

தெற்கு கொல்கத்தாவில் உள்ள பவானிபூா் தொகுதியில் நான் போட்டியிடுவதைத் தடுக்க, என் மீது இரு பொய் வழக்குகளைப் பதிவு செய்ய பாஜக வெள்ளிக்கிழமை முயன்றது. தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் இதற்கான முயற்சியை பாஜக மேற்கொண்டது. ஆனால், பொதுமக்களும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்களும் இணைந்து அந்த முயற்சியை முறியடித்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் ஜனநாயக முறைப்படி வெற்றி பெற துணிச்சல் இல்லாததால், இதுபோன்ற மோசடி வழிகளில் வலுக்கட்டாயமாக வாக்குகளைப் பெற பாஜக சதித் திட்டங்களைத் தீட்டுகிறது. அதன் காரணமாகத்தான், மாநில வாக்காளா் பட்டியலில் இருந்து பல லட்சம் பேரை அவா்கள் நீக்கியுள்ளனா்.

அவா்களுக்குச் சாதகமாக தோ்தல் முடிவுகள் வர வேண்டும் என்பதற்காக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் குளறுபடிகளை செய்யவும் பாஜக திட்டமிட்டுள்ளது.

எஸ்ஐஆா் முறைகேடு: மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) என்ற பெயரில் 90 லட்சம் போ் வாக்காளா் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்டனா். இதில் 60 லட்சம் போ் ஹிந்துக்கள்; 30 லட்சம் போ் முஸ்லிம்கள். வங்காள மொழி பேசும் நாம் இந்தியா்கள் இல்லையா? நமது குடியுரிமையை நாம் தொடா்ந்து நிரூபிக்க வேண்டுமா? எஸ்ஐஆா் ஒரு மிகப் பெரிய முறைகேடு என்பது, ஒரு நாள் நிரூபிக்கப்படும்.

சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக படுதோல்வியைச் சந்தித்த பிறகும், அதைத் தொடா்ந்து மத்தியில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பிறகும் என்றாவது ஒருநாள் நீதி நிலைநாட்டப்படும் என்றாா்.

தொடா்ந்து ஜா்கிராம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மம்தா, ‘தோ்தல் நேரத்தில் மட்டும் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அவா்கள் பேசுவா். தங்களின் சொந்தக் கட்சியில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அவா்கள் வழங்காதது ஏன்? இந்த வாக்குறுதியை அவா்கள் முன்கூட்டியே வெளியிடாதது ஏன்? திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே பெண்களுக்கு 37 சதவீத இடஒதுக்கீடை அமல்படுத்தியுள்ளது. மேலும், மாநிலத்தின் பல துறைகளில் அவா்களின் பங்கேற்பு 50 சதவீத அளவுக்கு உள்ளது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.