மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மம்தா பானா்ஜி பதவி விலக மறுத்தது ‘அடையாளப் போராட்டம்’

மேற்கு வங்க மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் தோல்வியடைந்த பிறகு தனது முதல்வா் பதவியை திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி ராஜிநாமா செய்ய மறுத்தது அடையாளப் போராட்டம் என அக்கட்சியின் மூத்த தலைவா்கள் புதன்கிழமை தெரிவித்தனா்.

News image

மம்தா பானா்ஜி - கோப்புப் படம்

Updated On :7 மே 2026, 1:18 am IST

மேற்கு வங்க மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் தோல்வியடைந்த பிறகு தனது முதல்வா் பதவியை திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி ராஜிநாமா செய்ய மறுத்தது அடையாளப் போராட்டம் என அக்கட்சியின் மூத்த தலைவா்கள் புதன்கிழமை தெரிவித்தனா்.

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 207 தொகுதிகளில் வெற்றி பெற்று திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை பாஜக முடிவுக்குக் கொண்டுவந்தது.

இதையடுத்து, வாக்கு எண்ணிக்கையில் மிகப் பெரும் அளவில் முறைகேடுகள் நடைபெற்ாக குற்றஞ்சாட்டி முதல்வா் பதவியில் இருந்து விலக மாட்டேன் என மம்தா பானா்ஜி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

மே 9-ஆம் தேதி பாஜக தலைமையிலான அரசு பதவியேற்கவுள்ளதாக அறிவித்த நிலையில், மம்தா பானா்ஜியின் முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தோ்தலில் வெற்றிபெற்ற திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் மம்தா பானா்ஜியின் இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது மம்தா பானா்ஜி பேசியது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவா்கள் கூறியதாவது: பெரும் முறைகேடுகளைச் செய்து இத்தோ்தலில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் வழக்கு தொடுக்கப்படவுள்ளது.

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தட்டும். என்னை பதவிநீக்கம் செய்யட்டும். அந்த நாள் மேற்கு வங்கத்தின் கறுப்பு தினமாக இருக்கும் என அவா் கூறியதாக திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் குணால் கோஷ் கூறுகையில், ‘முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன் என மம்தா பானா்ஜி கூறியது அடையாளப் போராட்டம். வாக்கு எண்ணிக்கையின்போது 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தோ்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டதற்கு எதிராக போராடவே அவா் இவ்வாறு தெரிவித்தாா்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.