பரமக்குடியில் நெசவாளர் வீட்டிற்குச் சென்ற திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், நெசவு செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக சனிக்கிழமை (ஏப். 11) இரவு பரமக்குடிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், இன்று காலை கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டு, பரமக்குடி திமுக வேட்பாளர் கே.கே. கதிரவனை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
அப்போது முதல்வர் ஸ்டாலின், அப்பகுதி மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். பரமக்குடியில் உள்ள நெசவாளர் வீட்டிற்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், நெசவாளர் குடும்பத்துடன் கலந்துரையாடினார்.
நெசவாளருடன் அமர்ந்து சேலை தயாரிக்கும் முறையை கேட்டறிந்த முதல்வர், கைத்தறியில் நெசவு செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து, நெசவாளர்களின் கோரிக்கைகளையும் அவர் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, தெளிச்சாத்தநல்லூர், காட்டுப் பரமக்குடி, ஓட்டப்பாலம் வழியாக பிரசார வாகனம் மூலம் ஐந்து முனை சந்திப்பு வரும் முதல்வர் ஸ்டாலின், அங்கு திமுக வேட்பாளர்கள் கே.கே. கதிரவன் (பரமக்குடி (தனி), காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் (முதுகுளத்தூர்), காங்கிரஸ் கட்சி திருவாடானை தொகுதி வேட்பாளர் கரு. மாணிக்கம் ஆகியோருக்கு வாக்குகள் சேகரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார்.
Summary
Visiting a weaver's home in Paramakudi, Chief Minister Stalin engaged in weaving while campaigning for votes.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் மு.க. ஸ்டாலின்!
திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!
தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்

திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

