திமுக - தவெக இடையே போட்டி நிலவுவதாக, விஜய் கூறுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக சனிக்கிழமை (ஏப். 11) இரவு பரமக்குடிக்கு வந்தார் முதல்வர் ஸ்டாலின்.
இன்று காலை பரமக்குடியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நடைப்பயிற்சி மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், அப்பகுதி மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
இதனிடையே செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்தது தொடர்பான கேள்விக்கு, ”ஜனநாயகன் பற்றி பதில் கூற வேண்டிய அவசியமில்லை” என்றார்.
ஜனநாயகன் படம் குறித்து திமுக மீது தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா வைத்த விமர்சனம் குறித்த கேள்விக்கு, ”ஆதவ் அர்ஜுனா செய்திகளை நான் படிப்பதில்லை” என்றார்.
தவெகவுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி என்று தவெக தலைவர் சொல்கிறாரே என்ற கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “அதற்குப் பதில் தெரிவிக்க நான் தயாராகயில்லை என்றார்.
எப்போதும் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் தானே போட்டி, தமிழ்நாட்டிற்கும் தில்லிக்கும்தான் போட்டி என்று சொல்ல காரணம் என்ன? என்ற கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் , அதிமுகவின் முகமூடியை போட்டுக்கொண்டுதானே பாஜக உள்ளே வருகிறது; அதனால், அதுதான் உண்மை” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், ” எடப்பாடி பழனிசாமி தோல்வியின் விரக்திக்கு சென்றுவிட்டார். அந்த விரக்தியில் பேசிக்கொண்டு இருக்கிறார். நடைப்பயிற்சி செல்வது என்னுடைய வழக்கம். மக்கள் உற்சாகமான வரவேற்பு அளிக்கின்றனர். மக்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்” என்றார்
Summary
Chief Minister Stalin has responded to questions raised by reporters regarding Vijay's assertion that a rivalry exists between the DMK and the TVK.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக ஆட்சிக்கு திமுக இடையூறு செய்யாது: மு.க. ஸ்டாலின்

முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவு! தவெக முன்னிலை!!
திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

