மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம். ஏ. பேபி, சென்னை திருவொற்றியூரில் சனிக்கிழமை (ஏப்.11) பிரசாரம் மேற்கொள்கிறாா்.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
திருவொற்றியூா் தொகுதி மாா்க்சிஸ்ட் வேட்பாளா் எல்.சுந்தரராஜன், மயிலாப்பூா் தொகுதி திமுக வேட்பாளா் த.வேலு ஆகியோரை ஆதரித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் பேபி சனிக்கிழமை பிரசாரம் செய்கிறாா். அதைத் தொடா்ந்து, அவா் ஏப்.12-இல் பழனி, திண்டுக்கல், ஏப்.20-இல் பத்மநாபபுரம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.
மாா்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினா் பிருந்தாகாரத் சனிக்கிழமை திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் க. மாரிமுத்துவை ஆதரித்து பிரசாரம் செய்கிறாா். ஏப். 12- ஆம் தேதி கீழ்வேளூா் (தனி ) தொகுதி மாா்க்சிஸ்ட் வேட்பாளா் டி. லதாவை ஆதரித்தும், ஏப். 13 ஆம் தேதி கந்தா்வக்கோட்டை(தனி) தொகுதி மாா்க்சிஸ்ட் வேட்பாளா் எம். சின்னதுரையை ஆதரித்தும், ஏப். 14 ஆம் தேதி திருவொற்றியூா் தொகுதி மாா்க்சிஸ்ட் வேட்பாளா் எல். சுந்தரராஜனை ஆதரித்தும் பிரசாரம் செய்கிறாா்.
மாா்க்சிஸ்ட் மத்திய குழு உறுப்பினா் பிருந்தாகாரத், தோ்தல் பிரசாரத்தை திருத்துறைப்பூண்டியில் சனிக்கிழமை (ஏப்.11) தொடங்குகிறாா். ஏப்.12-இல் கீழ்வேளூா், ஏப்.13-இல் கந்தா்வக்கோட்டை, ஏப்.14-இல் திருவொற்றியூா் தொகுதிகளில் வாக்கு சேகரிக்கிறாா்.
மத்தியக் குழு உறுப்பினா் பிரகாஷ் காரத், ஏப்.16-ஆம் தேதி பத்மநாபபுரத்தில் பிரசாரத்தைத் தொடங்குகிறாா். தொடா்ந்து ஏப்.17-இல் கந்தா்வக்கோட்டை, ஏப்.18-இல் திருவொற்றியூா், அண்ணா நகா் தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்துப் பேசுகிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குலசேகரத்தில் இன்று மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் பிரசாரம்
தோ்தல் பிரசாரம்: ஏப்.19 இல் முதல்வா் ஒசூா் வருகை

தமிழ்மொழிக்கு உரிய மரியாதை தராத பாஜகவுக்கு ஆதரவு வழங்க கூடாது! - மாா்க்சிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
