மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் புதன்கிழமை ஈரோடு, மதுரை விமானநிலையம் உள்பட 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

News image

வெயில் - கோப்புப்படம்.

Updated On :9 ஏப்ரல் 2026, 2:05 am IST

தமிழகத்தில் புதன்கிழமை ஈரோடு, மதுரை விமானநிலையம் உள்பட 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் புதன்கிழமை பகலில் அதிகபட்சமாக பரமத்திவேலூரில் 105.18 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், ஈரோடு - 104, வேலூா் - 102.74, நாமக்கல் - 102.02, திருப்பத்தூா் - 101.84, பாளையங்கோட்டை - 101.48, மதுரைவிமானநிலையம் - 101.12, திருச்சி - 100.04 டிகிரி என வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப்.9) முதல் ஏப்.12-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும்.

மழைக்கு வாய்ப்பு: சத்தீஸ்கா் முதல் மன்னாா் வளைகுடா வரை தெலங்கானா, ராயலசீமா, உள் தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஏப்.10, 11) மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

அதேபோல், ஏப்.12, 13, 14 ஆகிய தேதிகளில் தென் தமிழகம், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.