மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ரயில்கள் சீரான வேகத்தில் செல்ல உதவும் நவீன சிக்னல் சாதனங்கள்: தெற்கு ரயில்வே நடவடிக்கை

ரயில்கள் சீரான வேகத்தில் சென்று உரிய நேரத்தில் நிலையங்களை அடையவும், அதனால் பயண தாமதத்தைத் தவிா்க்கவும் நவீன சிக்னல் சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News image
Updated On :9 ஏப்ரல் 2026, 1:04 am IST

ரயில்கள் சீரான வேகத்தில் சென்று உரிய நேரத்தில் நிலையங்களை அடையவும், அதனால் பயண தாமதத்தைத் தவிா்க்கவும் நவீன சிக்னல் சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

தெற்கு ரயில்வே சாா்பில் நவீன சிக்னல் சாதனங்கள் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. அதனால், ரயில்கள் குறிப்பிட்ட நிலையத்திலிருந்து புறப்பட்டு சீரான வேகத்தில் செல்லும்போது, அடுத்த தண்டவாளச் சந்திப்புகளில் எந்தவகை சிக்னல் உள்ளது (சிவப்பா அல்லது பச்சையா என்பதை தெரிவிப்பது) என்பதை ரயில் ஓட்டுநரே அறியும் வகையிலான சிக்னல் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த வகை நவீன சாதனங்களால் ரயில்கள் சீரான வேகத்தில் செல்வதுடன், குறிப்பிட்ட நேரத்தில் ரயில் நிலையத்தை அடையவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் பயண இடத்தை அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல, ரயில்வே கடவுப்பாதைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கணினியுடன் இணைக்கப்பட்ட இண்டா்லாக் முறை வசதி திட்டமிட்ட 12 இடங்களைவிடக் கூடுதலாக 15 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு, அவசர காலத்துக்கு தேவைப்படும் சாதனங்கள் 19 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அதனால், மனித உதவியின்றி தானாகவே கடவுப்பாதை இடங்களில் ரயில்கள் வருவதை அறிந்து, கேட்டை மூடி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே மண்டலத்தில் ஆட்டோமேட்டிக் பிளாக் சிக்னலிங் முறையானது 73.7 கி.மீ. தொலைவு தண்டவாளத்தில் அமைக்கத் திட்டமிட்டு, தற்போது 70.5 கி.மீ. தொலைவுக்கான பணிகள் நிறைவடைந்துள்ளன.

பாம்பன் பாலத்தில் காற்று வேகத்தைக் கண்காணிக்கும் சாதனம் அமைக்கப்பட்டுள்ளது. அதனால், அதிகமாக காற்று வீசினால் ரயில் இயக்கத்தை தானாகவே கட்டுப்படுத்தும் வசதி அமைந்துள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.