அதிமுகவைச் சேர்ந்தவர்களே திமுகவில் வேட்பாளர்களாக போட்டியிட்டு வருவதாகவும், திமுக தேய்ந்து வருவதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 7) விமர்சித்தார்.
உளுந்தூர்பேட்டையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 7) எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதிமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டில் சாதிவாரிகணக்கெடுப்பு நடத்தப்படும்.
கிராமம், நகரம் என தமிழ்நாட்டில் எங்குபார்த்தாலும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் அதற்கு அடிமையாகி குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். போதை ஆசாமிகளால் நாளும் குற்றச் செயல்கள் நடக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளது.
திமுகவின் ஏவல் துறையாக காவல் துறை செயல்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதங்களில் கஞ்சா முழுமையாக ஒழிக்கப்படும். தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்கள் ஏன்? மூதாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளன.
நாட்டு மக்களைப் பற்றி மு.க. ஸ்டாலினுக்கு கவலையில்லை. தனது குடும்ப வளர்ச்சி பற்றி மட்டுமே சிந்தனை. நவீன முறையில் ஊழல் செய்யும் அரசாங்கம் திமுக உடையது. திமுக என்பது கட்சி அல்ல. கார்ப்பரேட் கம்பெனி. கருணாநிதி குடும்பத்தை தவிர வேறு யாரும் திமுகவில் உயர்ந்த பதவிக்கு வரலாம்.
கிளைச் செயலாளர் கூட அதிமுகவில் பொதுச்செயலாளர் ஆக முடியும். திமுகவில் அப்படி நடக்குமா? 2021 முதல் அதிமுகவைச் சேர்ந்த 8 பேர் திமுகவில் அமைச்சர்களாக இருந்தனர். தற்போது அதிமுகவில் இருந்து 18 பேர் திமுகவுக்குச் சென்று போட்டியிடுகின்றனர். திமுக தேய்ந்து வருகிறது
கருணாநிதியின் அடையாளத்தை வைத்து கட்சி நடத்துகிறார் மு.க. ஸ்டாலின். நான் 51 ஆண்டுகாலம் யாரையும் விமர்சித்துப் பேசியதில்லை. ஆனால், மு.க. ஸ்டாலினின் மகன் என்னை பேச வைக்கிறார் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Summary
TN Election 2026 edappadi palanisamy slams MKstalin in campaign
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என் ஆட்சியை மு.க. ஸ்டாலின் பார்ப்பார் : எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் பிரசாரம்!

அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்

தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி

எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


