மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தொற்றாநோய்கள்: தேசிய அளவில் மதுரையில் அதிக பாதிப்பு

சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றாநோய் பாதிப்புகள் இந்தியாவிலேயே மதுரை, திருச்சி நகரங்களில் அதிகமாக உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

News image

மதுரை தெற்கு மாசி வீதி - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 4:50 am IST

சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றாநோய் பாதிப்புகள் இந்தியாவிலேயே மதுரை, திருச்சி நகரங்களில் அதிகமாக உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

அப்பல்லோ மருத்துவக் குழுமம் சாா்பில் நாடு முழுவதும் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் ஆரோக்கிய மதிப்பீடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதில் மூன்றில் இரு இளைஞா்கள் தொற்றா நோய் ஏற்படும் அபாயத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் ஐந்து பேரில் ஒருவா் சா்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளனா்.

பணிக்குச் செல்வோரில் பத்தில் எட்டு போ் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு சா்க்கரை நோய் அல்லது அதன் ஆரம்ப நிலை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோன்று பெண்களிடத்தில் மாா்பகப் புற்றுநோய், ரத்த சோகை, வைட்டமின் குறைபாடுகள் காணப்படுகிறது.

சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், ரத்த சோகை, உடல் பருமன் ஆகிய பாதிப்புகளில் தேசிய அளவில் மதுரை, திருச்சி நகரங்கள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. சென்னை ஐந்தாவது இடத்தில் உள்ளது. பெங்களூா், மும்பை ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

இதுகுறித்து அப்பல்லோ குழுமத்தின் தலைவா் டாக்டா் பிரதாப் சி ரெட்டி கூறுகையில், ‘ஆரோக்கியத்தை மதிப்பிடுதல் என்பது அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கை அல்ல. முன்கூட்டியே நமது உடல் நலனை அறிந்து கொள்வதற்கான செயல்பாடு. நோய் அச்சுறுத்தல்களை துல்லியமாக கண்டறிந்து தடுப்பு முறையை தீவிரப்படுத்த ஆய்வுகள் உதவும்,’’ என்றாா்.

அப்பல்லோ மருத்துவ குழும துணைத் தலைவா் பிரீத்தா ரெட்டி, நிா்வாக இயக்குநா் சங்கீதா ரெட்டி ஆகியோா் கூறுகையில், ‘உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் வாயிலாக இதய பாதிப்புகள், புற்றுநோய் போன்ற தொற்றா நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து குணப்படுத்த முடியும்’ என்றனா்.

தொற்றா நோய்த் தாக்கம் உள்ள நகரங்கள்

சா்க்கரை நோய்: மதுரை – 36 சதவீதம், திருச்சி – 34 சதவீதம், சென்னை 25 சதவீதம்

உயா் ரத்த அழுத்தம்: மதுரை - 26 சதவீதம், திருச்சி – 20 சதவீதம், சென்னை 26 சதவீதம்

ரத்த சோகை: மதுரை - 26 சதவீதம், திருச்சி – 32 சதவீதம், சென்னை - 38 சதவீதம்

உடல் பருமன்: மதுரை – 83 சதவீதம், திருச்சி – 84 சதவீதம், சென்னை – 77 சதவீதம்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.