தாமரை மலரும் அதனுடன் இரட்டை இலையும் சேர்ந்து மலரும் என மதுரை வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்,
மயிலாப்பூர் சட்டப்பேரவை வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன் மனு தாக்கல் செய்த பொழுது மழை பெய்து வருண பகவானும் வாழ்த்தி உள்ளார். தாமரை மலரும் அதன் உடன் இரட்டை இலையும் சேர்ந்து மலரும்.
ஊழல் மிக்க குடும்ப ஆட்சி நடத்தும் ஸ்டாலின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். சென்னை மக்களுக்கும் மயிலாப்பூர் மக்களுக்கும் திமுக எதுவும் செய்யவில்லை.
தமிழகத்தில் போதை புழக்கம் அதிகமாக உள்ளது. அம்மா ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் சிறப்பாக இருந்தது. ஜெயலலிதா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. நிச்சயம் மயிலாப்பூர் மக்கள் தமிழிசை சௌந்தரராஜன் வாக்களிப்பார்கள்.
வேளச்சேரியில் அதிமுக வேட்பாளர் அசோக் குமார் ஆகியோருக்கும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும்.
தினமும் திமுகவினர் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். பிரதமர் பயணம் குறித்து தவறான தகவல்களை திமுக பரப்பினர். பிரதமர் சாலை வலம் ரத்து என சொன்னார்கள் நான் வெளிப்படையாகச் சவால் விடுகிறேன் முதல்வர் ஸ்டாலின் அதற்கு ஆதாரங்கள் காட்டுங்கள். பிரதமர் சாலை வலம் இரண்டு வாரம் முன்பே பணிகள் நடக்கும்.
மும்மொழி கொள்கையில் தவறான தகவல் பரப்புகிறார்கள். முதல்வரும் துணை முதல்வரும் தொடர்ந்து அவதூறு கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.
அடுத்த உதயநிதி ஸ்டாலின் முதல்வர் கிடையாது எடப்பாடி பழனிசாமி தான் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார்.
தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி மொழி கட்டாயம் என எங்குச் சொல்லப்பட்டுள்ளது என முதல்வர் கூற வேண்டும். நான் அவருக்கு நேரடி சவாலாகச் சொல்கிறேன். தமிழைப் படிக்க வேண்டும் என்பதையும் நாங்கள் கூறியுள்ளோம் என அவர் தெரிவித்தார்.
Summary
Union Minister Piyush Goyal, who is currently visiting Madurai, stated that the Lotus would bloom—and that the 'Two Leaves' symbol would bloom alongside it.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்டிஏ கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும்: பியூஷ் கோயல் உறுதி

விளையாட்டு வீரர்கள் நடிக்கும் விளம்பரம்! எச்சரிக்கையுடன் செயல்பட பியூஷ் கோயல் அறிவுறுத்தல்!
திமுக கூட்டணியின் மோசமான நிர்வாகத்தால் ஒவ்வொரு துறையிலும் பாதிப்பு: பியூஷ் கோயல்

ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

