சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் (58), இவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் போலீஸாரின் விசாரணையின் போது உயிரிழந்தனர். இதுதொடா்பாக அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், பால்துரை, காவலா்கள் முருகன், முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் உதவி ஆய்வாளர் பால்துரை உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, அவா் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 9 பேரும் சிறையில் உள்ளனர். இவர்கள் 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டுள்ளார்.
காவல் நிலையத்தில் வைத்து இருவரும் காவல் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். காவலர்கள் 9 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் முழுமையான தண்டனை விவரம் வெளியாகிள்ளது.
அனைத்து குற்றவாளிகளுக்கும் இரட்டை மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
முதல் குற்றவாளி காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு இரட்டை மரண தண்டனையும் சிறைத் தண்டனையும் ரூ. 84 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாம் குற்றவாளி உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனுக்கு இரட்டை மரண தண்டனையும் சிறைத் தண்டனையும் ரூ. 84 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் வழங்கப்பட்டுள்ளது.
மூன்றாம் குற்றவாளி ரகு கணேஷுக்கு இரட்டை மரண தண்டனையும் சிறைத் தண்டனையும் ரூ. 50 லட்சம் அபராதமும் வழங்கப்பட்டுள்ளது.
நான்காம் குற்றவாளி முருகனுக்கு இரட்டை மரண தண்டனையும் சிறைத் தண்டனையும் ரூ. 50 லட்சம் அபராதமும் வழங்கப்பட்டுள்ளது.
ஐந்தாம் குற்றவாளி சாமிதுரைக்கு இரட்டை மரண தண்டனையும் சிறைத் தண்டனையும் 2 லட்சத்து 20 ஆயிரம் அபராதமும் வழங்கப்பட்டுள்ளது.
ஆறாம் குற்றவாளி தலைமைக் காவலர் முத்துராஜுக்கு இரட்டை மரண தண்டனையும் சிறைத் தண்டனையும் ரூ. 32 லட்சம் அபராதமும் வழங்கப்பட்டுள்ளது.
ஏழாம் குற்றவாளி செல்லதுரைக்கு இரட்டை மரண தண்டனையும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
எட்டாம் குற்றவாளி தாமஸுக்கு இரட்டை மரண தண்டனையும் சிறைத் தண்டனையும் ரூ. 40 லட்சத்து நாற்பதாயிரம் அபராதமும் வழங்கப்பட்டுள்ளது.
ஒன்பதாம் குற்றவாளி வெயிலுமுத்துவுக்கு இரட்டை மரண தண்டனையும் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
பத்தாம் குற்றவாளி பால்துரை இறந்ததால் அவருக்கு தண்டனை ஏதும் வழங்கப்படவில்லை.
Summary
The Madurai District Court has sentenced nine individuals to death in the Sathankulam father-son murder case.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மரண தண்டனை விதிக்கப்பட்ட போலீஸாா் மேல் முறையீடு செய்ய மீண்டும் கால அவகாசம்

பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோ வழக்கில் பெண்ணுக்கு 95 ஆண்டுகள் சிறை

சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர்கள் 9 பேருக்கும் மரண தண்டனை!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


