சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர்கள் 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் (58), இவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் போலீஸாரின் விசாரணையின் போது உயிரிழந்தனர். இதுதொடா்பாக அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், பால்துரை, காவலா்கள் முருகன், முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் உதவி ஆய்வாளர் பால்துரை உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, அவா் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 9 பேரும் சிறையில் உள்ளனர்.
இந்த வழக்கில் சிபிஐ தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை எனவும், குற்றஞ்சாட்டபட்ட காவலர்கள் அனைவரும் குற்றவாளிகள் எனவும் மதுரை மாவட்ட நீதிமன்றம் கடந்த மாதம் 23- ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், காவலர்களின் மனநிலை குறித்து ஆய்வு செய்து, அதன் அறிக்கையை கடந்த 30-ஆம் தேதி தாக்கல் செய்ய நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டார்.
இதையடுத்து, சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதா், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்கள் முருகன், முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் ஆகிய 9 பேரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவா்களுக்கு மன நலன், உடல் நலம் குறித்து பல்வேறு கட்ட பரிசோதனைகள் நடைபெற்றன.
இந்த நிலையில், இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் முன் கடந்த மாதம் 30-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, மத்திய, மாநில அரசு சாா்பில் காவலர்களின் மன நிலை, சொத்து விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதனால், தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட அப்போதைய காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்ளிட்ட 9 பேரும் நீதிபதி முன் முன்னிலையாகினர்.
ஒவ்வொருவரிடமும் தனித் தனியாக அவர்களின் குடும்ப விவரங்கள், கல்வி, சொத்து உள்ளிட்ட விவரங்களை நீதிபதி கேட்டடார். 9 பேரும் விளக்கம் அளித்ததுடன், தங்களது தரப்பு கோரிக்கைகளையும் நீதிபதியிடம் எடுத்துக் கூறினர்.
குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும். அரிதான காவல் நிலைய கொடூர வழக்குகளில் மரண தண்டனை வழங்கலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டதாக தெரிவித்து, சிபிஐ தரப்பு வழக்குரைஞர் விஜயன் முன்னிலையாகி தன்னுடைய வாதத்தை முன்வைத்தார்.
இந்த நிலையில், இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி 9 பேருக்கும் மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.
நீதிபதி முத்துக்குமரன் வழங்கிய தீர்ப்பின் விவரம்:
வழக்கில் கைது செய்யப்பட்ட 9 காவலர்களுக்கும் மரண தண்டனை விதிப்பதே சிறந்தது. இது போன்ற வழக்குகளில் ஆயுள் தண்டனை வழங்கினால், இப்படி செயல்படும் காவலருக்கு அச்சம் ஏற்படாது.
ஒரே நேரத்தில் தந்தை மகன் என ஒரு குடும்பத்தின் ஆணிவேர் பிடுங்கப்பட்டுள்ளது. சாதாரண நபர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு சாதாரண தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே இதில் குற்ற செயல்களை செய்துள்ளனர்.
சட்டத்தை காக்க வேண்டியவர்களே குற்ற செயலில் ஈடுபட்டுள்ளார்கள். வேலியே பயிரை மேய்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
இரக்கமின்றி அடித்ததை கொடூரமாகவே பார்க்க வேண்டும். குற்றவாளிகளை சார்ந்து குடும்பம் உள்ளது என்பதால் தண்டனையை குறைக்க வேண்டுமென்பதை ஏற்க இயலாது. தண்டனை குற்றத்தின் தன்மையைப் பொறுத்தே தீர்மானிக்க வேண்டும்.
காவல் நிலையத்தில் வைத்து இருவரும் காவல் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
The Madurai District Court has sentenced nine individuals to death in the Sathankulam father-son murder case.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மரண தண்டனை விதிக்கப்பட்ட போலீஸாா் மேல் முறையீடு செய்ய மீண்டும் கால அவகாசம்
சாத்தான்குளம் வழக்கு: மூச்சுத் திணறி இறந்ததாக பேசியோருக்கு தண்டனை வழங்குக - கமல்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றவாளிகளான காவலா்களுக்கு மரண தண்டனை வழங்க நீதிமன்றத்தில் சிபிஐ முறையீடு

சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


