தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

போடியில் ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல்!

போடியில் ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது பற்றி...

News image

ஓபிஎஸ் வேட்புமனு - DMK

Updated On :6 ஏப்ரல் 2026, 1:01 pm IST

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளார்.

தனது போடி தொகுதியில் ஓபிஎஸ் இம்முறை திமுக சார்பில் போட்டியிடுகிறார்.

இதையடுத்து போடி தொகுதியில் ஓபிஎஸ் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். முன்னதாக அவர் போடி தீர்த்ததொட்டி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

ஓபிஎஸ், 2011, 2016, 2021 தோ்தல்களில் இத்தொகுதியில் திமுகவை எதிா்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் போடி தொகுதியில் திமுக சார்பில் தங்கத்தமிழ்செல்வன் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

2026 தேர்தலில் போடி தொகுதியில் ஓபிஎஸ்ஸை எதிர்த்து அதிமுக சார்பில் வி.டி. நாராயணசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் கலையரசு, தவெக சார்பில் பிரகாஷ் குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Summary

Former CM O. Panneerselvam files nomination in bodi constituency

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.