ஏப். 8, 9 தேதிகளில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை மயிலாப்பூரில் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.
தொடர்ந்து சென்னையின் ஆலந்தூர், தாம்பரம், ஆர்.கே. நகர், திருவொற்றியூர் பகுதிகளில் பிரசாரம் செய்த அவர், பின்னர் நாகர்கோவில், ராதாபுரம், கடையநல்லூர், கோவில்பட்டி, சிவகாசி, பரமக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
இன்று காலை எடப்பாடி பேரவைத் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்த இபிஎஸ், தற்போது பெரம்பலூரில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் ஏப். 8, 9 தேதிகளில் சென்னையில் இபிஎஸ் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.
ஏப். 8 ஆம் தேதி வேளச்சேரி, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், தி.நகர், அண்ணா நகர், வில்லிவாக்கம், கொளத்தூர், பெரம்பூர் ஆகிய பகுதிகளிலும்
ஏப். 9 ஆம் தேதி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, ராயபுரம், துறைமுகம், திருவிக நகர், எழும்பூர் ஆகிய பகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.


Summary
Edappadi palanisamy campaign in Chennai on April 8 and 9
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்

எடப்பாடியில் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார் இபிஎஸ்!

ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படும்! இபிஎஸ் வாக்குறுதி

ஏப். 15ல் குமரியில் பிரதமருடன் பிரசாரம்; 210 தொகுதிகளில் வெல்வோம்: இபிஎஸ் பேட்டி
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


