காட்பாடி அடுத்த பொண்ணை பகுதியில் தேர்தல் பிரசாரத்திற்காக சென்ற திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வாகனத்தை தடுத்து நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
திருவாரூரில் நேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்காக, தஞ்சாவூர் அடுத்த சாலியமங்கலம் அருகே முதல்வர் ஸ்டாலின் சென்று கொண்டிருந்தபோது அவரின் வாகனத்தை நிறுத்திய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனத்தில் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில், இன்று அமைச்சர் துரைமுருகன் வாகனத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதனிடையே காட்பாடி தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் மூன்று பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் வேட்பாளர்கள் அறிவித்த நிலையில் காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பொன்னை பகுதியில் உள்ள ஒட்டனேரி கிராமத்தில் தனது முதல் கட்ட பிரசாரத்தை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் துவங்குவதறக்க காட்பாடியில் உள்ள இல்லத்திலிருந்து புறப்பட்டார்.
அப்போது பொன்னை மேம்பாலம் பகுதியில் கண்ணியம்பாடி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் மற்றும் காவலர்கள் சிவக்குமார், ஹேமலதா ஆகியோர் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பயணித்த கார் மற்றும் வாகனத்தை பின் தொடர்ந்து வந்த இரண்டு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குஷ்பு சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை!

அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

