மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.

News image

அமைச்சர் அன்பில் மகேஸ் காரில் சோதனையிடும் தேர்தல பறக்கும் படையினர்.

Updated On :12 ஏப்ரல் 2026, 12:10 pm IST

திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இன்று காலை தேர்தல் பிரசாரத்திற்காக கொட்டப்பட்டு - பொன்மலை சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, தேர்தல் பறக்கும் படையினர் அமைச்சரின் வாகனத்தை மறித்து சோதனையில் ஈடுபட்டனர். பறக்கும் படையினரின் சோதனைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.

சோதனையில் பணம் மற்றும் பரிசுப் பொருள் எதுவும் இல்லாததால் அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தை செல்ல தேர்தல் பறக்கும் படையினர் அனுமதித்தனர். இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Summary

Election Flying Squad conducted a search of the vehicle belonging to Thiruverumbur constituency candidate and Minister Anbil Mahesh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.