பாஜகவிடம், அதிமுகவை உள்வாடகைக்கு விட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி மீது முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
எதிர்வரும் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி திருச்சியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(ஏப். 1) பிரசாரம் மேற்கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக திருச்சி தென்னூா் உழவா் சந்தை திடலில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்று, இம்மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
திருச்சி பிரசாரக் கூட்டத்தில் பேசியது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”இப்போதும் எப்போதும் திருச்சி தி.மு.க. பக்கம்தான்!
திருச்சிக்கு திராவிட மாடல் அரசு நிறைவேற்றித் தந்துள்ள பிரம்மாண்ட வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்டு உரிமையோடு வாக்கு கேட்டேன்.
பா.ஜ.க.விடம் அ.தி.மு.கவை உள்வாடகைக்கு விட்டு, வெற்று வாய்ச்சவடால் விடும் பழனிசாமிக்கு 11-ஆவது படுதோல்வி வந்துகொண்டிருக்கிறது.
மலைக்கோட்டை மாவட்டம் எப்போதுமே திமுக கோட்டைதான் என்பதை 2026 தேர்தல் முடிவுகள் உறுதிபட உணர்த்தும்.
திருச்சியில் 2021-இல் பெற்றது போன்றே மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முழுவெற்றி மீண்டும் கிடைக்கும்! திராவிட மாடல் 2.0 வெற்றி உறுதி!” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
Chief Minister Stalin has criticized the AIADMK, stating that it has been sublet to the BJP.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம்: இபிஎஸ்
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

நேர்மையான தேர்தலுக்காகவே அதிகாரிகள் மாற்றம்! திமுகவுக்கு ஏன் பயம்? இபிஎஸ்
சங்கிகளைப்போல வாட்ஸ்ஆப் வதந்திகளை வாந்தியெடுக்கும் பழனிசாமி: மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

