சேலம் மாவட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வரும் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
சேலம் மாவட்டம் தான் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பாமக தலைவர் அன்புமணி இந்த பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
பிரசார நிகழ்வில் பேசிய இபிஎஸ்,
"திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. போதைப்பொருள் கலாசாரம் அதிகரித்துள்ளது.
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது. அதுதான் இப்போது தமிழ்நாட்டில் நடக்கிறது.
ஒரு குடும்பம் பிழைக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 கோடி மக்களை வாட்டி வதைக்கின்றனர். 200 இடங்களில் வெல்வதாகக் கூறும் திமுகி 20 இடங்களில் வென்றால் ஆச்சரியம்தான்.
திமுக கூட்டணியில் சேர்ந்து அதிமுக கூட்டணிக்காக குரல் கொடுக்கும் பிரேமலதாவிற்கு நன்றி. உண்மை உறங்காது என்பதுபோல் எதிரிகளுடன் கைகோர்த்து நின்றாலும் பிரேமலதா மனதில் உள்ளதை பேசுகிறார்.
அதிமுக ஆட்சி மீண்டும் வந்ததும் போதைப்பொருள் இல்லா தமிழகம் உருவாக்கப்படும்.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் 'போதையில்லா தமிழகம்' உருவாக்கப்படும்" என உறுதி அளித்தார்.
Summary
It would be a surprise if the DMK wins even 20 seats: EPS
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்

அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம்: இபிஎஸ்

நேர்மையான தேர்தலுக்காகவே அதிகாரிகள் மாற்றம்! திமுகவுக்கு ஏன் பயம்? இபிஎஸ்

காலில் விழுந்து ஆசி பெறுவது தமிழர்களின் பண்பாடு: உதயநிதிக்கு இபிஎஸ் பதில்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
